தமிழகத்தில் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித்தேர்வு - என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு, ஜனவரி 9,10ஆம் தேதிகளில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களின் நலனுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன:
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வு எழுதும் மையத்திற்கு சென்றடைய வேண்டும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளுக்குத் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டு காலை 9.15 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுக்கூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை உடைய பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், ஏனைய நிற மைப் பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.
விடைத்தாளில் உரிய இடங்களில் கையொப்பமிட்டு, இடது கைப் பெருவிரல் ரேகையினைப் பதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மை படாமலும் மற்றும் விடைத்தாள் எவ்வகையிலும் சேதமடையாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்குள் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியவில்லையென்றால் விடைத்தாளில் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.
Recommended Video

விடைத்தாளில் A, B, C, D மற்றும் E என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரியக் கட்டங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கை தவறாகும் பட்சத்தில் தேர்வர் பெறும் மதிப்பெண்ணிலிருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும். எனவே இதனைக் கவனத்துடன் பிழையில்லாமல் சரியாக எழுதி கருமையாக்கப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ள வேண்டும். இச்செயலை செய்வதற்கு மட்டுமே ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு நேரம் முடிவுற்ற பிறகு 15 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும்.
மேற்கூறிய அம்சங்கள் தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்வித தவறுகளும் நிகழாமல் தவிர்ப்பதற்காகவும் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications