தமிழக ஆளுநருடன்.... முதல்வர் எடப்பாடி பழனிசாமி... இன்று மாலை சந்திப்பு!!
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசியக் கல்வி கொள்கை குறித்து ஆலோசிக்க நேற்று ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து பேசினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

மேலும் சட்டசபைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி கூடுகிறது. மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் நடத்துவதற்கு அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு நான்கு நாட்கள் நடைபெறும் என்று கூறப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மூன்று நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்தும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் தகவல் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது. இத்துடன் மாநிலத்தில் கொரோனா தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விஷயங்களை ஆளுநருடன் முதல்வர் பகிர்ந்து கொள்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications