Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்- மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து- அறிவுரை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு தலைவர்கள் தெரிவித்துள்ள வாழ்த்துகளும் அறிவுரையும்:

Tamil Nadu CM MK Stalin and leaders greet winners in Plus 2 Students

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!

Tamil Nadu CM MK Stalin and leaders greet winners in Plus 2 Students

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tamil Nadu CM MK Stalin and leaders greet winners in Plus 2 Students

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்: தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உயர்கல்வி சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதனை நினைத்து கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து உயர்கல்வி பயணத்தைத் தொடங்க வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை: பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதற்கு, தமிழ்நாடு அரசு கல்விக்காக வழங்கும் அனைத்துத் திட்டங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தேர்ச்சி பெறாத மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து தேர்ச்சி பெற வேண்டும்.
மாணவர்களின் வெற்றிக்காக முயற்சி செய்த அவர்கள்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை: இன்றைய தினம் வெளிவந்துள்ள பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, கல்லூரிக் கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய துறைகளும், பல்வேறு வாய்ப்புகளும், அனைவருக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கக் காத்திருக்கின்றன. மாணவர்கள், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டிக் கொள்கிறேன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் துவண்டு விடாமல், அடுத்த முறை சிறப்பாக உழைத்து, முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தை ஆண்டவன் அருளட்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழகத்தில் இன்று வெளியாகியிருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்தகட்ட உயர்கல்வியை நோக்கி பயணிக்க தயாராகியிருக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட மாணவ, மாணவியர்கள் தேர்வின் முடிவுகளை வாழ்க்கையின் மதிப்பீடுகளாக கருதாமல், விரைவில் நடைபெற இருக்கும் துணைத்தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டு, வெற்றிபெற்று வருங்காலத்தில் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+