Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் "குல்லா".. எகிறிய எல்.முருகன்.. அப்ப "சங்கரமடம்" வாழ்த்து சொல்லுமா? சீறிய சுப.வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, மகளிர் உரிமை தொகையை முன்கூட்டியே கொடுத்துள்ளது இந்த அரசு.. சிறப்பு பஸ்களை இயக்கியுள்ளது.. மற்றபடி, மக்கள் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லையே? இதையெல்லாம் விட்டுவிட்டு, ஒருவர் இறந்ததற்கு வாழ்த்து சொல்வதுதான் இப்போ முக்கியமா?" என்று திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லையே ஏன்? என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி விமர்சித்து வருகிறார்கள்..

Tamil Nadu CM MK Stalin did not greet Deepavali Wish and DK Sr leader Suba Veerapandian replies TN BJP

வானதி சீனிவாசன்: "வாழ்த்து சொல்ல முடியாத அளவுக்கு, இந்துக்கள் மீது அப்படி என்ன வெறுப்போ தெரியவில்லை... இந்துக்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்? முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, இந்த தீபாவளிக்காவது வாழ்த்து சொல்வீங்களா? அல்லது வழக்கம் போல செலக்டிவ் மதச்சார்பின்மையை தொடர போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.

"குல்லா போட்டு கஞ்சி குடிக்க போறாரு.. சர்ச்சுக்கு போய் கேக் வெட்டி சாப்பிடுறாரு. தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல முதல்வர் ஸ்டாலினால் முடியவில்லையா? இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்"என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் விமர்சித்திருந்தார்.

உதயகுமார்: "நாடு முழுவதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை, ஒரு முதல்வர் பதவியில் இருப்பவர் சீர்குலைக்கலாமா? வாழ்த்து சொல்லாமல் மவுனமாக இருப்பது நியாயம்தானா? முதல்வர் என்பவர் எல்லோருக்கும் உரியவர், எல்லோர் நம்பிக்கையையும் காப்பவர் என்ற எண்ணம் சீர் குலைந்துள்ளது. அதனால் தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு தர மறுத்தார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இந்த விமர்சனத்துக்கெல்லாம் பதிலடியை, கவிப்பேரரசு வைரமுத்து நேற்று தந்திருந்தார்.. "மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து தீபாவளியை கொண்டாட வைத்தவரே முதல்வர் தானே? உங்களுக்கு வாழ்த்து என்பது, சொல்லால் வேண்டுமா? செயலால் வேண்டுமா? சொல் என்பது பித்தளை.. செயல் என்பது தங்கம். நீங்கள் பித்தளையால் வாழ்த்து சொல்கிறீர்களா? இல்லை தங்கத்தால் வாழ்த்து சொல்கிறீர்களா? நம்ம முதல்வர், உங்களுக்கு தங்கத்தால் தீபாவளி வாழ்த்தை சொல்லியிருக்கிறார். அதுவே சிறந்தது என்று நம்புகிறேன்" என்றார்.

நரகாசுரன்: இந்நிலையில், "திமுக என்ற நரகாசுரனை பாஜக விரைவில் வதம் செய்யும்" என்று எல்.முருகன் சாடியிருந்ததற்கு, திராவிடர் கழக மூத்த தலைவர் சுப வீரபாண்டியன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்..

இதுகுறித்து ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில்,"திமுகவை வெற்றி பெறுவோம் என்று எல்.முருகன் சொல்வில்லை, மாறாக திமுகவை வதம் செய்வோம் என்றுதான் சொல்லி உள்ளார்.. வதம் செய்து கொண்டாடுவது தான் உங்களுக்கெல்லாம் தெரியுமா? என்றைக்கும் நல்லதை கொண்டாடவே மாட்டீர்களா?

அடுத்தவன் சாவை கொண்டாடுவதுதான் தீபாவளி.. யாராக இருந்தாலும், ஒருவர் இறந்து போனால் அது கொண்டாடுவதற்கான விஷயம் கிடையாது.. தீபாவளி என்பது தேவர் - அசுரர் யுத்தத்தின் விளைவாகும்.. அரசாங்கம் என்றால், அது தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் பொதுவானதுதான். அப்படியிருக்கும் போது, ஒருவர் இறந்ததை எப்படி வாழ்த்த முடியும்?

அறிவியல் உண்மை: பெரியார் பிறந்தநாளுக்கு பாஜக வாழ்த்து சொல்லுமா? அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த ஒருவருக்கே அவர்கள் வாழ்த்து சொல்ல மாட்டார்கள். போரில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது ஒருவகை கதை. ஆனால் அதில், அறிவியல் எவ்வளவு இருக்கிறது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்
இந்த அரசு என்ன செய்திருக்கிறது? பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே கொடுத்துள்ளது.. சிறப்பு பஸ்களை இயக்கியுள்ளது.. மற்றபடி, மக்கள் விருப்பத்திற்கு அரசு குறுக்கே நிற்கவில்லையே.

சங்கரமடம்: துணிக்கடை, பட்டாசுக் கடை எல்லாவற்றையும் விட கறிக்கடையில் தான் கூட்டம் அதிகம் இருந்தது என்பதுதான் நேற்றைய முக்கியச் செய்தி. கறிக்கடையில் கூட்டம் அலைமோதுவதை அவர்கள் ஏற்கிறார்களா? சரி... இவ்வளவு சொல்கிறார்களே.. சங்கரமடம் என்னைக்காவது தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறதா? அதை ஏன் என்று பாஜகவினர் கேட்பார்களா? இவ்வாறு சுப. வீரபாண்டியன் கேள்வியெழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+