ஒரே நாடு ஒரே தேர்தல்- இந்தியாவின் கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டுவர இருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லாதது; இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத் தன்மை கொண்ட சிக்கலான தேர்தல் முறைகளை கவனத்தில் கொள்ளாததுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த முயற்சிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்திய கூட்டாட்சி முறையையே தகர்க்கக் கூடியதுதான் இந்த ஒரே நாடு ஒரே திட்டம் என இருவரும் விமர்சித்திருந்தனர்.
தற்போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் முறையானது சிக்கலான, பன்முகத் தன்மை கொண்டது. இதனை புறக்கணிக்கிறது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம். இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்கக் கூடியது இந்த திட்டம்.
இந்திய தேர்தல் நடைமுறைகள், மாநில பிரச்சனைகள், நிர்வாக முன்னுரிமைகள் வேறுபாடனவை. ஆகையால் நடைமுறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது சாத்தியமே இல்லாதது. ஆட்சி நிர்வாக நடைமுறைகளை நாசமாக்கக் கூடியது இது.
பாஜக தமது சுய கவுரவத்துக்காக இத்தகைய ஒரே நாடு ஒரே திட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தவே முடியாது. இந்திய ஜனநாயகத்தை ஒரே ஒரு கட்சியின் சுயநலத்துக்கும் பேராசைக்கும் வளைத்துவிட்டுப் போகவும் முடியாது.
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு சமமான பகிர்வுகளை வழங்குதல் ஆகிய பிரச்சனைகள் மத்திய அரசு முன் இருக்கும் முதன்மையானவை. இதில் கவனம் செலுத்தாமல் இவற்றை திசை திருப்பும் வகையில் தமது சக்தியை மத்திய பாஜக அரசு வீணடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications