Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: நாளை பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது பிறந்த நாள் விழாவையொட்டி நாளை பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதேபோல் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அரசு சார்பிலும் முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

mk stalin muthuramalinga devar madurai

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாள் மற்றும் அன்னாரது 62-வது குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் நாளை காலை தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

அதேநாளில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கும், மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

முத்துராமலிங்க தேவர்: தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள், இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்து, பின் இசுலாமியத் தாய் ஆயிஷாபீவி அவர்களால் வளர்க்கப்பட்டதன் காரணமாக, இசுலாமிய மக்களின்பால் அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார். அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போரட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார். அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.

ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும். 1939-ஆம்ஆண்டு ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூடன் இணைந்து செயல்பட்டார். 1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக் கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி 61601 பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார்.

பசும்பொன் தேவர் திருமகனார் ஆன்மீகம், தேசியம். பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். இத்தகைய சிறப்புகளை கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேவர் ஜெயந்தி விழாவின்போது, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும். வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாத்திட, ஒரு நிரந்தர மண்டபம் அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு வைத்த கோரிக்கையினை ஏற்று, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தின் இரு நுழைவாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதிலாக பொதுமக்கள் நலன்கருதி இரண்டு மண்டபங்கள் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டு, அவரது நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 28.10.2024 அன்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+