வேற லெவலாகும் தமிழகம்..இனி இதுமட்டும் நடக்கவே நடக்காது! முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் நேரில் நன்றி
சென்னை: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 2642 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அரசு மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாகவும், இதன் காரணமாக உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர் பற்றாக்குறையால் சிசு கர்ப்பிணி மரணங்கள் இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து மருத்துவர் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரடியாக கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20062 உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்," மக்கள் நலனை நீங்கள் கவனியுங்கள் உங்கள் நலனை அரசு பார்த்துக் கொள்ளும் என உறுதி அளித்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மருத்துவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்," சென்னையில் இன்று 2642 மருத்துவர்களுக்கு தமிழக அரசு பணியில் சேர ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. மாண்புமிகு மருத்துவத்துறை அமைச்சர் அவர்கள் ஏற்பாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மருத்துவர்களுக்கு ஆணைகளை வழங்கினார். அனைத்து மருத்துவர்களுக்கும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கவுன்சிலிங் நடத்தப்பட்டு அவர்கள் தேர்வுக்கேற்ப பணி ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க (TNGDA ) நிர்வாகிகள் கலந்து கொண்டு, மாண்புமிகு முதல்வர் அவர்களை விழா மேடையில் சந்தித்து தமிழக அரசின் மருத்துவத்துறையின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி அதற்கான நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். மேலும் சங்கம், மருத்துவர்களுக்கு அவர்களுடைய நெடுநாளைய கோரிக்கையை ஏற்று சம்பள உயர்வுக்காக அரசாணை 293 வழங்கியமைக்காக 20000 அரசு மருத்துவர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரசாணை வழங்கியமைக்காக சங்கம் நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும் விழா மையத்தில் பதாதைகள் அமைத்தும் நன்றி தெரிவித்து கொண்டது.
மருத்துவத் துறையில் கடந்த நான்கு ஆண்டு காலம் வெளிப்படையான, நேர்மையான கவுன்சிலிங் மூலம் பணி மாறுதல், பதவி உயர்வு, பணி நியமனம் நடைபெற்று வருவதற்கு சிறப்பான பாராட்டையும் தெரிவித்துக் கொண்டது. இன்று நடைபெற்ற புதிய மருத்துவர்கள் நியமனத்தால், மருத்துவத் துறை மேலும் சிறப்பாக பணியாற்றும். பொதுமக்கள் நலம் பெறுவார்கள். கர்ப்பிணி மரண விகிதம், சிசு மரண விகிதம் முதலியவற்றை குறைக்க இயலும் என்று சங்கம் தெரிவித்துக்கொள்கிறது." என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications