ஸ்டாலினை பாராட்டிய ஆளுநர்.. ராஜ்பவனில் தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டில் ரூட் மாறுதே.. எல்லாம் சுபம்!
சென்னை: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். இந்த பேரணியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்திய நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளார்.
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வகையில் சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து முன்னாள் படைவீரர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு சென்னையிலுள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பேரணி தொடங்கியது. தேசியக் கொடியை ஏந்திய படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியை தொடங்கி வைத்து நடந்து சென்றார்.

இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வைகோ உள்ளிட்ட திமுக கூட்டணி தலைவர்கள், பல்வேறு சமுதாயத்தினர் மாணவ மாணவிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் அருகில் நிறைவு பெற்றது.
இந்நிலையில் இந்த பேரணியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி இருந்தார். இதுதொடர்பாக ராஜ்பவன் வெளியிட்ட பதிவில்,""பாகிஸ்தானிய ராணுவ ஆக்கிரமிப்பு செயல்களுக்கு எதிராக நாட்டை துணிச்சலுடனும் வெற்றிகரமாகவும் பாதுகாக்கும் இந்திய ஆயுதப் படைகளுடன் நமது 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் தெளிவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில்மாலையில் பிரம்மாண்டமான மக்கள் பேரணியை நடத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நமது ஆயுதப் படைகளுடன் நமது தேசம் ஒற்றுமையாகவும் உறுதியாகவும் துணைநிற்பது, பயங்கரவாதத்தின் அனைத்து முனைகளையும் அழித்தொழித்து நமது தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது." என கூறியிருந்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகையில் அனைத்து மதங்களின் சார்பில் இந்திய ராணுவத்திற்கு ஒருமித்த ஆதரவு அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு சார்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆளுநரின் இந்த முன்னெடுப்பிற்கு நன்றி தெரிவித்தும், இந்திய ராணுவத்திற்குத் தமிழ் நாடு அரசு என்றும் உறுதிபட துணை நிற்கும் எனவும் தெரிவித்து உரையாற்றினார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதிலிருந்து திமுக தலைமைக்கும் அவருக்கும் மோதல் நிலவி வருகிறது. பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி ஆளுநருக்கு எதிராக தீர்ப்பினை பெற்றது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில் முதன்முறையாக தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ஆளுநர் பாராட்டி இருப்பதும், ஆளுநர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications