என்ன பண்றீங்க? சோஷியல் மீடியாவை கண்காணியுங்கள்.. கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு ஸ்டாலின் பொளேர் ஆர்டர்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 2 நாள் கூட்டமான இதில் தற்போது முக்கியமான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இது வருடா வருடம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு ஆகும்.

இதில் சட்ட ஒழுங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம். அதே சமயம் போலீசார், மாவட்ட ஆட்சியர்களுக்கு பல முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இன்று நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும், உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன. பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு வகையான சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறீர்கள்.
என்ன உத்தரவு?: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளுநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும்.
கடந்த ஒரு மாத காலமாக சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பதைப் போன்றத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் சில ஊடகங்களில் இது போன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும்.
இதனைத் தவிர்க்க, காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள், ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்வதுடன், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனையும், ஊடகங்களுக்கு தெரியப்படுத்திவர வேண்டும்.
இதுதவிர, முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகைகள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வப்போது பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலன் அளிக்கும். நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும், என்றார்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
-
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி.. அடுத்தடுத்து மாற்றம்.. எடப்பாடி மூவ்? எப்படி நடந்தது? -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்!












Click it and Unblock the Notifications