தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடைக்குமா? தொழில் அதிபர்களுடன் காணொலியில் முதல்வர் ஆலோசனை
சென்னை: கொரோனா நோய் காரணமாக இன்றியமையா உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டும் இயங்குகின்றன. தமிழகத்தில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது (ம) நோய் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி ஊரடங்கு முடிந்த நிலையில் மீண்டும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மே 3ம் தேதி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் , சுற்றுலா தொழில் என அனைத்தும் முடங்கி உள்ளது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தொழில்கள் முடங்கியுள்ளதால் தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், ஏழைகள், கூலி தொழிலாளர்கள் என அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் எதுவும் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. மே 3ம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்கப்படாது என்று அண்மையில் தமிழக அரசு அறிவித்தது. இதனால் மே 3 வரை தொழில்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.
Recommended Video
இந்நிலையில் தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்டியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழில் அதிபர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணி அளவில் காணொலி காட்சி முறையில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நோய் தொற்று பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications