சேரில் ‘வெள்ளை துண்டு' போடாதீர்கள்.. சிறுமி சொன்னதை கேட்டு உடனே மாற்றிய விஜய்! கவனம்பெற்ற முதல்வர்
சென்னை: அரசு அலுவலகங்களில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வரும் 'துண்டு' காலசாரத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கைவிட்டுள்ளார். மணிப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமியும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான லிசிபிரியா கங்குஜமின் கோரிக்கையை ஏற்று அவர் இதனை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இருக்கைகளில் துண்டு விரிக்கும் கலாசாரத்தின் பின்னணி மற்றும் அதனை விஜய் கைவிட்டது ஏன்? என்பது பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். தினமும் தலைமை செயலகம் வந்து அவர் பணியாற்றி வருகிறார். அதிகாரிகளுடன் பல்வேறு விஷயங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் விஜய் அமர்ந்து இருக்கும் இருக்கையில் வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டு இருக்கும் போட்டோக்கள் வெளியாகின.

இருக்கைகளில் வெள்ளை துண்டு விரிப்பது என்பது ஆங்கிலேயர் காலத்து நடைமுறையாகும். அதோடு இது விஐபி கலாசாரமாகும். இதனால் அதனை கைவிட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜமின் விருப்பம் தெரிவித்தார்.
துண்டு பயன்படுத்துவதை தவிர்க்க..
இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் தனது எக்ஸ் பக்கத்தில், ''ஹலோ விஜய் சார். இந்தியாவில் இருக்கைகளில் துண்டு பயன்படுத்தும் இந்த நடைமுறையை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? முதல்வர்கள் என்பதவர்கள் விஐபி என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
இந்த துண்டு பயன்படுத்தும் முறையை இனி அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சிறிய அதிகாரிகள் வரை பின்பற்றுவார்கள். நீங்கள் பெரிய இன்ஸ்பிரிரேஷனாக இருக்கிறீர்கள். இதனால் இந்த மாற்றத்தை உங்களால் கொண்டு வர முடியும்'' என்று கூறியிருந்தார். இதன்மூலம் இருக்கைகளில் துண்டு விரிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என்று அவர் விஜய்யை டேக் செய்து தெரிந்திருந்தார்.
துண்டு பயன்பாட்டை நிறுத்திய விஜய்
இதையடுத்து நேற்று நடந்த மீட்டிங்கில் விஜய் தனது இருக்கையில் வெள்ளை துண்டு பயன்படுத்தப்படவில்லை. அவர் இருக்கையிலேயே அமர்ந்து தன்னை சந்தித்த பலரிடம் பேசினார். இதுதொடர்பான போட்டோவையும் லிசிபிரியா கங்குஜமின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ''நன்றி விஜய் சார். நீங்கள் சாமானிய மக்களின் குரலுக்கு செவிசாய்க்கிறீர்கள் என்பதை உங்களின் செயல் நிரூபிக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மாற்றம் வரத்தான் போகிறது'' என்று கூறியுள்ளார்.
வெள்ளை துண்டின் பின்னணி
இது பார்க்க சின்ன விஷயமாக இருந்தாலும் கூட பின்னணியில் சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. இருக்கைகளில் வெள்ளை நிற துண்டு பயன்படுத்துவதன் பின்னணியில் சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அதாவது விஐபிக்களின் தலையில் உள்ள எண்ணெய் இருக்கையில் ஒட்டுவதை தவிர்க்க இந்த வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ஆங்கிலேயர்கள் கோட்சூட் அணிவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இதனால் நீண்டநேரம் அமரும்போது வியர்வை வெளியேறும். இப்படி வெளியேறும் வியர்வை பருத்தியால் உருவாக்கப்பட்ட இந்த துண்டு உறிஞ்சி விடும்.
'விஐபி கல்சர்' அடையாளம்
இதுதவிர நாற்காலியில் வெள்ளை நிற விரிக்கும்போது சிறிய கறை இருந்தாலும் கூட எளிதாக தெரிந்துவிடும். இதனால் விஐபிக்கள் கறை இல்லாத இருக்கையில் அமர்வதை பார்த்தவுடன் உறுதி செய்து கொண்டு நம்பிக்கையுடன் அமர முடியும். அதோடு விஐபி மற்றும் விவிஐபிக்களை தனித்து காட்டவும் இந்த வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் இப்படி துண்டு போட்டு அமரும் நபர்கள் தான் விஐபி என்று தனித்து காட்டும் நடைமுறையாக இருந்தது.
இந்நிலையில் தான் இத்தகைய பிரிட்டிஷ் காலனித்துவ வெள்ளை துண்டு நடைமுறையை கைவிட வேண்டும் என்று மணிப்பூரை சேர்ந்த 14 வயது இயற்கை ஆர்லவலரும், சிறுமியுமான லிசிபிரியா கங்குஜமின் கூறிய நிலையில் விஜய்யின் இருக்கையில் வெள்ளை துண்டு பயன்படுத்துவது கைவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications