கொரோனா : இன்று முழு லாக்டவுன் - திங்கட்கிழமை காலை 6 மணிவரை வீட்டுக்குள்ளேயே இருங்க
தமிழகத்தில் இன்று முழு லாக்டவுன் அமலானது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. இன்றைய தினம் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது.
சென்னை: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஞாயிறுகிழமையான இன்று தமிழகம் முழுவதும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. பால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. அவசிய தேவைகளுக்குக் கூட வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. வீட்டை விட்டு வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
தமிழகத்தில் ஆறாம் கட்ட லாக்டவுன் தளர்வுகளுடன் ஜூலை 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழுமையான ஊரடங்கு தளர்வுகள் எதுவும் இன்று அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி கடந்த ஜூலை 5, ஜூலை 12 தேதிகளில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பக்தர்களும் அமைதியாக வீட்டிற்குள் இருந்தனர். லாக்டவுனை மீறி வெளியே வந்தவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜூலை மாதத்தின் மூன்றாவது ஞாயிறு கிழமையான 19 ஆம் தேதியான இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
காய்கறி, மளிகை, மட்டன் சிக்கன் கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இன்று பொதுமக்கள் மருத்துவக் காரணமன்றி வேறு அவசியத் தேவைகளுக்கும் வெளியில் வந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும், வாகனம் பறிமுதல் செய்யப்படும். அபராதம் விதிக்கப்படும். மருத்துக் கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறந்து வைத்தால் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தடை உத்தரவை மீறி வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டம் 144 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் 044 - 23452330, 23452362,9003130103 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
அரசின் கண்டிப்பான எச்சரிக்கையை அடுத்து இன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications