தமிழக காங். தலைவர் மாற்றம்? முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த கார்கே! கொண்டாடும் அழகிரி ஆதரவாளர்கள்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார் மல்லிகார்ஜுனே கார்கே.
இதனால் கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள், போட்றா வெடியை என வேட்டு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ள கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டதால், புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு பல மாதங்களாக இருந்து வருகின்றன. அவ்வாறு புதிய தலைவர் நியமனம் செய்யும் பட்சத்தில், தலைவர் பதவியை கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, விஜயதரணி, செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் என ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் முயன்று வருகின்றனர்.
இந்தச்சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முக்கியப் பிரமுகர்களை அழைத்து ஆலோசனை நடத்திய கார்கே, தலைவர் மாற்றம் குறித்து அப்போது வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. கே.எஸ்.அழகிரியின் ராசியோ என்னவோ தெரியவில்லை, அவர் தலைவரான பிறகு தமிழக காங்கிரஸ் அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றியை ஈட்டி வருவதால் அவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மாற்ற வேண்டுமா என யோசிக்கத் தொடங்கியிருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
இதனால் தற்காலிகமாக தலைவர் மாற்றம் என்ற முடிவை கார்கே கைவிட்டுவிட்டதாக டெல்லியிலிருந்து கிடைத்த தகவலை அடுத்து கே.எஸ்.அழகிரி ஆதரவாளரான ரஞ்சன் குமார், வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி நேற்றைய தினம் கொண்டாடி தீர்த்திருக்கிறார். இதனிடையே தலைவர் பதவியை எதிர்பார்த்த காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் மீண்டும் ஒரு முயற்சியாக கே.எஸ்.அழகிரிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்டு சிலர் தூபம் போட்டு வருகின்றனர். அழகிரியை பொறுத்தவரை மீண்டும் தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை. தலைமை பார்த்து என்ன முடிவெடுத்தாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலையில் உள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications