"திமுக கூட்டணி வேண்டாம்!" காங்கிரஸ் தலைமைக்கு பிரஷர் போடும் நிர்வாகிகள்? ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகச் செய்ய ஆரம்பித்துள்ளன. இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. இன்று மதியம் இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில், இதில் பல நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ரெடியாகி வருகிறது. இதில் காங்கிரஸ் இப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதலே இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றிகரமாகவே இருந்துள்ளது. அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியையே பதிவு செய்து வந்து இருக்கிறது. இக்கூட்டணியில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் இருந்தது.

கூட்டணி
ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை மாறிவிட்டது. காங்கிரஸில் சில தலைவர்கள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். விஜய்யின் தவெக உடன் கூட்டணி அமைக்க லாபி நடக்கிறது. விஜய் கூட்டணி ஆட்சிக்கு ரெடி என அறிவித்து இருப்பதே இதற்குக் காரணமாக இருக்கிறது. வெளிப்படையாகவே சில காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி குறித்துப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு நிர்வாகியிடமும் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், கூட்டணி தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் பொதுவெளியில் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
செயற்குழுக் கூட்டம்
இப்படிப்பட்ட சூழலில் தான் இன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் பகல் 12.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.. சட்டசபைத் தேர்தல் ஆயத்தப் பணிகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழகச் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்தியக் காங்கிரஸ் செயலா்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் இதில் கலந்து கொள்வதாகவும் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நண்பகல் கூட்டம் கூடிய நிலையில், அப்போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பங்கேற்கவில்லை
ஏனென்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்தில் சுமார் 30 பேர் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சூழலில், 30 பேர் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஆட்சியில் பங்கு என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதிருப்தி?
காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தவெக கூட்டணிக்குப் போக வேண்டும் என அழுத்தம் கொடுத்தாலும் கூட காங்கிரஸ் தலைமை திமுக உடன் கூட்டணியில் தொடரவே விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகக் கலந்து கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
லால்குடி தண்டவாளத்தில் தலை வைத்த மன்சூர் அலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. வியந்த திருச்சி












Click it and Unblock the Notifications