என்னங்க சொல்றீங்க? கட்சி தலைவருக்கே அழைப்பு போகலையா.. காங்கிரஸ் குலுங்கிடுச்சே.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 20-ந்தேதி வருகிறது. இந்த நாளில் ஒவ்வொரு வருசமும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை பயணத்தை தமிழக காங்கிரஸ் தொடங்கும். இந்த பயணம் டெல்லியில் முடிவடையும். டெல்லியில் இந்த ஜோதியை ராகுல்காந்தி பெற்றுக்கொள்ளவிருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டு கூட இந்த யாத்திரைக்கு பின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செய்தார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கேயே அமர்ந்து தியானம் செய்தார். 2003ல் இந்த நினைவிடம் திறக்கப்பட்டது. நினைவிடம் திறக்கப்பட்ட போது ராகுல் காந்தி அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதன்பின் ராகுல் காந்தி அங்கே வரவே இல்லை. இந்த நிலையில்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து 2022ம் ஆண்டில் ராகுல் இங்கே வந்து மரியாதை செய்தார்.

Congress Rahul Gandhi

இப்போது மீண்டும் ராகுல் காந்தி இங்கே ராஜிவ் காந்தி பிறந்த நாளை ஒட்டி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜிவ்காந்தியின் பிறந்தநாள் ஆகஸ்ட் 20-ந்தேதி வருகிறது. இந்த நாளில் ஒவ்வொரு வருசமும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை பயணத்தை தமிழக காங்கிரஸ் தொடங்கும். இந்த பயணம் டெல்லியில் முடிவடையும்.

மிகப்பெரிய பிளான்: தமிழக காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து இந்த பயணத்தை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வருடம் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், தனது ஆதரவாளர்கள் மூலம் இந்த ராஜிவ்காந்தி ஜோதி யாத்திரையை தொடங்கியிருக்கிறார்கள். மாணிக்கம் தாக்கூரின் உத்தரவின் பேரில் அவரது நண்பரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான சிரஞ்சீவி, இந்த பயணத்தை தொடக்கி வைத்துள்ளார்.

தொடங்கும் ஜோதி பயணம்: ஜோதி பயணம் தொடங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 20-ந்தேதி இந்த யாத்திரை டெல்லியில் நிறைவு பெறும். டெல்லியில் இந்த ஜோதியை ராகுல்காந்தி பெற்றுக்கொள்ளவிருக்கிறார். ஜோதி பயணம் நிறைவு பெறும் ராஜிவ்காந்தி பிறந்த நாள் விழாவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொள்வதற்கேற்ப டெல்லியில் பல விசயங்களை ஏற்பாடு செய்து வருகிறார் மாணிக்கம் தாக்கூர்.

யார் தலைமையில் கூட்டம்: பொதுவாக, காங்கிரஸில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், கட்சியின் மாநில தலைவரை அழைத்து அவரது தலைமையில்தான் நடத்தப்படும். கடந்த காலங்களில் இப்படித்தான் நடந்திருக்கிறது. அந்த வகையில், ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்க நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உட்பட கோஷ்டி தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.

அழைக்கத் தேவையில்லை என தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மாணிக்கம் தாக்கூர். இதனால், ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை நிகழ்ச்சியை பற்றி யாருக்கும் சொல்லப்படவில்லை. இந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை புறக்கணித்து விட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பது சத்திய மூர்த்திபவனில் சலசலப்பை உருவாகியிருக்கிறது.

கட்சியில் குழப்பம்: இதனையடுத்து, ''ஆரோக்கியமாக இருக்கும் காங்கிரஸ் கட்சியில் பிரித்தாளும் சூழ்ச்சியை மாணிக்கம் தாக்கூர் ஏற்படுத்துகிறார். மாநில தலைவருக்கே சொல்லப்படாமல் முக்கிய நிகழ்ச்சி ஒன்று நடப்பது துரதிர்ஷ்டமானது. மாணிக்கம் தாக்கூரின் தனி ஆவர்த்தனம் கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல'' என்கிற ரீதியில் தனது ஆதரவாளர்களைக் கொண்டு ராகுல்காந்திக்கு புகார் அனுப்பி வைத்துள்ளார் செல்வப்பெருந்தகை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+