தமிழகத்தில் சூப்பர்.. ஒவ்வொரு நாளும் வேகமாக அதிகரிக்கும் கொரோனா டிஸ்சார்ஜ்..இன்றைய நிலவரத்தை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 19,504 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த மாதம் 5 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 2500 ஆக குறைந்துவிட்டது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 19 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம், திருவள்ளூர், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு மிக குறைவாக காணப்படுகிறது.

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா டிஸ்சார்ஜ்

கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,940 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,98,820 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1238 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 652 பேரும், சேலத்தில் 238 பேரும், திருவள்ளூரில் 152 பேரும், செங்கல்பட்டில் 150 பேரும்,. ஈரோட்டில் 100 பேரும், கன்னியாகுமரியில் 102 பேரும், நாமக்கல்லில் 124 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 எவ்வளவு மரணம்

எவ்வளவு மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 31 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,183 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 6 பேர், கோவையில் 5 பேர், காஞ்சிபுரத்தில் 3 பேர், ராணிப்பேட்டையில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 70,297 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,00,99,519 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 68,984 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 98,29,013 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 19,504 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

திருப்பூரில் உயர்வு

திருப்பூரில் உயர்வு

சென்னையில் குணம் அடைவோர் அதிகமாகவும் தொற்று பாதிப்பு குறைவாகவும் உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 671 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 201195 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 6422 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 243 பேரும், திருப்பூரில் 149 பேரும், செங்கல்பட்டில் 136 பேர், சேலத்தில் 125 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+