தமிழகத்தில் ஒரே நாளில் 1636 பேருக்கு கொரோனா.. சென்னையில் 633 பேருக்கு தொற்று.. ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் மீண்டவர்களின் எண்ணிக்கை 1,023 ஆக உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 9,746 பேர் சிகிக்சை பெறுகிறார்கள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 633 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3751 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 1437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,69,804
ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,023 பேர் இன்று மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,49,064 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,145 இல் இருந்து 9,746 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணம்

கொரோனா மரணம்

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,630 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் 5 பேரும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 2 பேரும் பலியாகி உள்ளனர்.

RT-PCR டெஸ்ட்

RT-PCR டெஸ்ட்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகளை தமிழக அரசு விரைவுப்படுத்தி உள்ளது. அத்துடன் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இன்று 80,293 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,90,431 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 80,63 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,90,11,118 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

மாவட்ட பாதிப்பு

மாவட்ட பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர்,. தஞ்சாவூர், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 147 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 86 பேருக்கும், தஞ்சாவூரில் 72 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உயர்வு

சென்னையில் உயர்வு

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் தற்போது 9,746 பேர் சிகிக்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 3751
பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1014
பேரும், கோவையில் 879 பேரும், தஞ்சாவூரில் 571 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+