சென்னை, கோவை, செங்கல்பட்டில் மீண்டும் மின்னல் வேகம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 5,622 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,622 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 46,255 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 5500 என்கிற நிலையான அளவில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை., செங்கல்பட்டு, கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் ஆயிரத்தை கடந்து விட்டது. 6 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 5,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் எவ்வளவு
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,596 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,58,534 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1071 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 685 பேரும், சேலத்தில் 331 பேரும், தஞ்சாவூரில் 335 பேரும், திருப்பூரில் 286 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை எவ்வளவு பலி
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 65 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 21 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் 7 பேரும்., கடலூரில் 6 பேரும், கோவையில் 5 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை அதிகம்
தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. இன்று மட்டும் 87,311 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 76,13,999 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 85,446 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 73,90,255 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

மாவட்ட பாதிப்பு
சென்னையில் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 1364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,71,415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 12,311 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 486 பேரும், செங்கல்பட்டில் 395 பேரும், சேலத்தில் 351 பேரும், திருவள்ளூரில் 290 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications