தமிழ்நாட்டில் நேற்றை விட.. சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

நேற்று 739 பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் இன்று 746 பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தினசரி பாதிப்பில் கோவை 112 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 சற்று அதிகரித்த கொரோனா

சற்று அதிகரித்த கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 800-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 746 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட சற்று அதிக பாதிப்பாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,23,991 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு

கொரோனா உயிரிழப்பு அதிகரித்த நிலையில் குறைந்துள்ளது. கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2 பேர் இறந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனாவுக்கு 36,443 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 759 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,79,130 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கோவையில் அதிகம்

கோவையில் அதிகம்

8,418 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,03,005 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,29,35,936 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 103 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 ஈரோடு, சேலம்

ஈரோடு, சேலம்

கோவை 113 பாதிப்புகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. செங்கல்பட்டில் 59 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 23 பேருக்கும், மதுரையில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 9 பேருக்கும், திருவள்ளூரில் 28 பேருக்கும், திருச்சியில் 22 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 56 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், சேலத்தில் 56 பேருக்கும், நாமக்கல்லில் 45 பேருக்கும், தஞ்சாவூரில் 15 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+