Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பர்ஸை பதம் பார்த்த ஆம்னி பஸ்கள்.. அதிரடியாக ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்! லட்சக்கணக்கில் ஃபைன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளித்தால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் மேற்கொண்ட நடவடிக்கையின்படி ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடமிருந்து இணக்க கட்டணமாக 2,46,000 ரூபாயும், 41 லட்சத்து 77 ஆயிரத்து 362 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 முதல் 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Omni Bus Pongal

ஆம்னி பேருந்து

மேலும் பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், இதற்காக ஆணையரகம் அளவில் புகார் அளிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பயணம்

இந்த நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் மேற்கொண்ட நடவடிக்கையின்படி ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடமிருந்து இணக்க கட்டணமாக 2,46,000 ரூபாயும், 41 லட்சத்து 77 ஆயிரத்து 362 ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆம்னி பஸ் சோதனை

இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு (12.01.2026 ( 18.01.2026 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு தமிழகம் முழுவதும் 45 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு 13.01.2026 வரை 3337 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டு 547 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு ஆணையரகம்

மேற்கண்ட தணிக்கையின்போது இணக்ககட்டணம் ரூ.2,46,000/- மற்றும் வரியாக ரூ.41,77,362/- வசூலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு தணிக்கையில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்ட 30 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பேருந்துகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பயணிகள் எந்தவித சிரமமின்றி அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்பெறுகின்றது." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+