”இனி சேப்பாக்கம் மைதானத்தில் டூர் போகலாம்” விரைவில் வெளியாகும் டிஎன்சிஏ-வின் அசத்தல் அறிவிப்பு!

சேப்பாக்கம் மைதானத்திற்கு ரசிகர்கள் டூர் செல்லும் வகையில் டிஎன்சிஏ முக்கிய முடிவை எடுத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தை ரசிகர்கள் சுற்றிப் பார்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தை போட்டிகள் நடக்காத நாட்களிலும் சென்று ரசிகர்கள் பார்வையிடும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்

கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்

இதற்கு முன் சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கலைஞர் திறந்து வைத்தார். இப்பொழுது கலைஞர் பெயரிலான கேலரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.

கேலரி பணிகள்

கேலரி பணிகள்

சேப்பாக்கம் மைதானத்தின் கேலரிகள் இன்று திறக்கப்பட்டாலும், மைதானத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன், அனைத்து பணிகளையும் முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக இரவு பகல் பார்க்காமல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மைதானத்தில் ரசிகர்கள் டூர்

மைதானத்தில் ரசிகர்கள் டூர்

இன்றைய நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும், பணிகள் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ரசிகர்கள் மைதானத்தில் டூர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கால்பந்து மைதானங்களில் போட்டிகள் நடக்காத போது, ரசிகர்கள் வீரர்களின் ஓய்வறை, கேலரிகளை பார்வையிட சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் அருங்காட்சியகத்தை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

டிஎன்சிஏ முடிவு

டிஎன்சிஏ முடிவு

ஆனால் இந்தியாவில் போட்டிகள் நடக்கும் நாட்களை தவிர்த்து, வேறு எந்த நேரத்திலும் ரசிகர்களால் மைதானத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது. இந்த நிலையில் முதல்முறையாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மைதானத்தில் ரசிகர்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டிஎன்சிஏ சார்பாக ஏற்கனவே தமிழ்நாடு கிரிக்கெட் மற்றும் சிஎஸ்கே பற்றிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின், ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சுற்றிப் பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+