Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’The Dictator’ ஸ்டாலின்..சவகுழியில் சட்டம் ஒழுங்கு! நாளை வீடியோவோட வருவார் பாருங்க! எடப்பாடி சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சையில் பாஜக பெண்ணு நிர்வாகி கொலை, கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவன் குத்தி கொலை, புதுக்கோட்டையில் ஜாதிய வன்முறை என ஒரே நாளில் அடுத்தடுத்த குற்ற சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சவக்குழியில் இருப்பதாகவும், தி டிக்டேட்டர் படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என விமர்சித்துள்ளார் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தஞ்சையில் சொத்து தகராறு காரணமாக தமிழக பாஜக பெண் நிர்வாகி சரண்யா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதேபோல வண்டலூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வெட்டி கொலை, கரூரில் 12 ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை என ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களால் அதிர்ந்து கிடக்கிறது தமிழகம். இந்த நிலையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லை என சொல்லும் ஸ்டாலினுக்கும், தி டிக்டேட்டர் படத்தில் வரும் ஹீரோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி.

edappadi palaniswami mk stalin dmk

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"நான்காண்டு ஸ்டாலின் மாடல் ஆட்சி- சவக்குழிக்கு சென்ற சட்டம் ஒழுங்கே சாட்சி! ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் வந்த சில செய்திகள்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் நிர்வாகி சரண்யா மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை. திருப்பத்தூர் கூத்தாண்டகுப்பம் அருகே கிணற்றில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலம் கண்டுபிடிப்பு. வண்டலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் வெட்டிக்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலையில் கோயில் திருவிழாவில் மதுபோதை ஆட்டத்தை தட்டிக்கேட்ட 12-ம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக்கொலை, -புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் இரு ஜாதி தரப்பினர் இடையே மோதலில் வீடுகளுக்கு தீ வைப்பு; பேருந்து கண்ணாடி உடைப்பு; 5 பேருக்கு அரிவாள் வெட்டு, நாளையோடு திரு. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சராசரி நாள் எப்படி இருக்கிறது என்பதற்கு இன்றைய ஒரு நாளின் செய்திகளே சாட்சி. ஒவ்வொரு நாளும் இப்படி கொலைகளுக்கு, கலவரங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் இடையில் தான் நாம் வாழ்கிறோம். ஆனால், இது எதைப் பற்றியும் துளியும் அக்கறை இல்லாதவராய், நாலாண்டு கழிந்து விட்டது என நாளை ஒரு வீடியோஷூட் எடுத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் வருவார் பாருங்களேன்.

"The Dictator" எனும் ஆங்கில படத்தின் ஹீரோவுக்கும் ஸ்டாலினுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை! "எனது ஆட்சியில் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடக்கவில்லை" என்று சட்டப்பேரவையில் சொன்னவர், இதையெல்லாம் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளாகக் கருதவே இல்லை என்றே தோன்றுகிறது. "ஆக, குற்றவாளிகள் கைது" என்று சொல்வீர்களே- அதையாவது செய்து, சட்ட நடவடிக்கை எடுங்கள் என்று விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் .

எனதருமை தமிழ்நாட்டு மக்களே- இனியும் இந்த ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை; இன்னும் ஓராண்டு உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ளுங்கள். 2026-ல் #ByeByeStalin என்று சொல்லப்போகும் உங்களின் தீர்ப்பு மூலம் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமையும்! தமிழ்நாடு உங்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான அமைதிப்பூங்காவாக மீண்டும் திகழும் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+