DGP Venkataraman: தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கடராமனுக்கு திடீர் நெஞ்சுவலி.. கிண்டி மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கடராமனுக்கு (DGP Incharge Venkataraman) இன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திடீரென அவர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக பணிபுரிந்து வந்தவர் சங்கர் ஜிவால். இவர் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருப்பவர் தான் தமிழக காவல்துறையின் தலைவராக செயல்படுவார்.

tamil-nadu-dgp-incharge-venkatraman-suffers-sudden-chest-pain-and-admitted-to-guindy-hospital

இதையடுத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக வெங்கடராமன் சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் வெங்கடராமனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக சங்கர் ஜிவால் பணி ஓய்வையொட்டி தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்ய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டது. மொத்தம் 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. முதல் மூன்று இடங்களில், தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக உள்ள சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரியாக உள்ள டிஜிபி ராஜீவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குநர், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் உள்ளன.

இந்த பட்டியலில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, டிஜிபியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்வு நடைமுறை நிறைவடையவில்லை. இதனால் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இவர் டிஜிபி அலுவலகத்தில், நிர்வாகப்பிரிவு டிஜிபியாக இருந்த நிலையில் அவர் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டில் போலீஸ் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வெங்கடராமன் கவனித்த அனுபவம் கொண்டவர்.

குறிப்பாக 2001ல் சென்னை எஸ்பியாக பணியாற்றினார். பிறகு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2009ல் தமிழக காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தவர். 2012ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். * 2019ல் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம் தலைமையகம், நிர்வாக பிரிவுகளில் பணியாற்றினார். 2024ல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றவர். சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+