Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில் 6 கொலைகள்.. எடப்பாடியின் பகீர் புகார்! கொலைக்கு காரணமே வேற.. தமிழக டிஜிபி சொன்ன விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 6 கொலைகள் நடந்துள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக தமிழக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சிருந்தார். இந்நிலையில் இக்கொலைகள் சொத்து தகராறு, முன்விரோதம். திடீர் ஆவேசம் போன்றவற்றால் கொலைகள் நடைபெற்றுள்ளனவே தவிர. சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது எனவும், தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

shankar jiwal police edappadi palaniswami


மேலும், வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? எனவும் கேள்வி எழுப்பியிந்தார்.

தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம் எனவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இக்கொலைகள், சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”'6 பேர் படுகொலை! நேற்று ஒரே நாளில் அதிமுக பிரமுகர் உட்பட கேள்வி குறியாகிறது தமிழக சட்டம் & ஒழுங்கு நிலவரம் என்று செய்தி வெளிவந்துள்ளது. இந்த ஆறு சம்பவங்களின் விவரம்

shankar jiwal police edappadi palaniswami

(1) 08.09.2024 அன்று தென்காசி மாவட்டம், பனவடலிசத்திரம் கா.நி. சரகம், மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த வெள்ளியப்பன் பாலமுருகனால் கொலை செய்யப்பட்டார். அவ்வூர் கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இறந்து போன நபருக்கும், எதிரிக்குமிடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் நடந்துள்ளது. இவ்வழக்கில் எதிரிகள் இருவர் கைது.

(2) 08.09.2024 அன்று இராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் கா.நி. சரகம், புழுதிக்குளத்தைச் சேர்ந்த மோகன் என்பவரை அவரது உறவினர் பாலாஜி உள்ளிட்ட சிலர் கொலை செய்தனர். இச்சம்பவம், 29.05.2024 அன்று எதிரிகளின் உறவினர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது.

(3) 08.09.2024 அன்றிரவு சென்னை, பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ், சாஸ்திரி நகர் கா.நி. சரகம், பெசன்ட்நகர் கடற்கரையில் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது கானா பாட்டு பாடுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 5 எதிரிகள் கைது.

(4) 08.09.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி கா.நி. சரகம், ஆத்தூப்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் பொது மக்களுக்கு இடையூறு செய்த துரைசாமியை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் துரைசாமி கைது

(5) 08.09.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் கா.நி. சரகம்.. சின்ன பாறையூரைச் சேர்ந்த பழனியை சொத்து தகராறு காரணமாக அவரது உறவினர் கண்ணாயிரம் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 எதிரிகளும் கைது.

(6) 07.09.2024 அன்று கோயம்புத்தூர் மாநகர். செல்வபுரம் கா.நி. சரகம், பழைய தோட்டம் பகுதியில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் கோகுலகிருஷ்ணன் என்பவரை பிரவீன் உள்ளிட்டோர் கொலை செய்தனர். இவ்வழக்கில் எதிரிகள் 5 பேரும் கைது.

மேற்குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களும் சொத்து தகராறு, உறவினர்களுக்கிடையே முன்விரோதம், திடீர் ஆவேசம் போன்றவற்றால் நடைபெற்றுள்ளனவே தவிர, சாதி, மத மோதல் காரணமாகவோ, கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலோ நடைபெற்றவை அல்ல.

எனினும், இச்சம்பவங்களில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, வீண் விளம்பரத்திற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் மிகைப்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது உகந்ததல்ல.” என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+