Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று ஓய்வு: சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு.. தமிழக தீயணைப்பு ஆணைய தலைவராக நியமித்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய டிஜிபி நியமனம் செய்யப்பட உள்ளார். இந்நிலையில் தான் ஓய்வு பெறும் சங்கர் ஜிவாலுக்கு தமிழக அரசு புதிய பொறுப்பை வழங்கி உள்ளது. அதன்படி சங்கர் ஜிவால் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக டிஜிபியாக பொறுப்பு வகித்து வருபவர் சங்கர் ஜிவால். டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை தொடர்ந்து கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி டிஜிபியாக பொறுப்பேற்றார்.

shankar jiwal dgp tamil nadu

2 ஆண்டுகள் வரை அவர் டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 31 வரை உள்ளது. ஆனால் நாளை (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட்31) ஆகிய நாட்கள் விடுமுறை தினங்களாகும். இதனால் சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு

இந்நிலையில் தான் பணி ஓய்வுக்கு பிறகும் கூட சங்கர் ஜிவாலை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அதோடு டிஜிபி சங்கர் ஜிவாலை தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.

அதன்படி அவர் அந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. டிஜிபியாக ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் இன்று தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலளர் தீராஜ் குமார் பிறப்பித்தார்.

யார் இந்த சங்கர் ஜிவால்?

சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஜினியரிங் படிப்பை முடித்த அவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று 1990ம் ஆண்டில் ஐபிஎஸ் ஆனார். தமிழகத்தில் ஐபிஎஸ்ஸாக பணியை தொடங்கினார். 1993ம் ஆண்டில் மன்னார்குடியில் உதவி எஸ்பியாக பணியை தொடங்கினார். அதன்பிறகு 1995ல் சேலம் எஸ்பியானார்.

அதைத்தொடர்ந்து ஆளுநரின் உதவியாளராக நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு தொடர்ந்து அவர் பதவி உயர்வு பெற்று வந்தார். மேலும் தமிழகத்தின் பல இடங்களில் அவர் பணியாற்றினார். சென்னை காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய இவர், இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றுள்ளார்.

மத்திய அரசு பணி

மத்திய அரசு பணிக்கு சென்றார். மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமையின் தெற்கு பிராந்திய இயக்குநராக பணியாற்றினார். உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் ஐஜியாக செயல்பட்டார். பிறகு மாநில அரசு பணிக்கு வந்தார்.

தமிழ்நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவை (Organized Crime Intelligence Unit) அமைப்பதிலும், மாநில புலனாய்வு பிரிவை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார். பிறகு 1999ல் மதுரை எஸ்பியாகவும், 2000ம் ஆண்டு சென்னை மண்டல போதை தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் பணியாற்றினார்.

சென்னை கமிஷனராக பணி

2005ல் திருச்சி போலீஸ் கமிஷனராகவும், 2008 ல் சென்னையில் உளவுப்பிரிவு II டிஐஜியாகவும், 2011ல் உளவுத்துறையின் ஐஜியாகவும் பணியாற்றினார். அதன்பிறகு ஈரோட்டில் சிறப்பு படை ஐஜியாக பணியாற்றினார்.

2015ல் ஏடிஜிபியாகவும் பணியாற்றினார். 2021ல் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றினார். அதன்பிறகு 2013 முதல் டிஜிபியானார். இன்று அவர் ஓய்வு பெற்ற நிலையில் தமிழக தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+