மதுரை டூ கன்னியாகுமரி.. மோசமான பாதிப்பு ..எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் வழக்கமாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் இப்போது வேகமாக குறைந்து வருகிறது. ஆனால் பிற மாவட்டங்களில் தொற்று கடுமையாக உயர்ந்து வருகிறது. பல மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 4,244 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் மூன்றில் இரண்டு பங்கு தொற்று சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கடுமையாக உள்ளது. மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நாளுக்கு நாள் மோசமாக உள்ளது- இந்த மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் தலா 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

 77 ஆயிரமாக உயர்வு

77 ஆயிரமாக உயர்வு

தமிழகத்தில் வழக்கம் போல் சென்னையில் தான் இன்று கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்ற 1,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76,148 லிருந்து 77,338 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் தூத்துக்குடி

வேலூர் தூத்துக்குடி

சென்னைக்கு அடுத்தபடியாக அதன் அண்டைமாவட்டமான காஞ்சிபுரத்தில் 385 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. மதுரையில் 319 பேருக்கும் விருதுநகரில் 246 பேருக்கும், திருவள்ளூரில் 232 பேருக்கும். செங்கல்பட்டில் 245 பேருக்கும் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுளளது. வேலூரில் 151 பேருக்கும், தூத்துக்குடியில் 136 பேருக்கும், திருநெல்வேலியில் 131 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 103 பேருக்கும், திருவண்ணாமலையில் 151 பேருக்கும், கன்னியாகுமரியில் 104 பேருக்கும், கோவையில் 117 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கையில் அதிகம்

சிவகங்கையில் அதிகம்

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 115 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இதேபோல் சேலத்தில் 98 பேரும், சிவகங்கையில் 75 பேரும், ராமநாதபுரத்தில் 75 பேரும், கள்ளக்குறிச்சியில் 67 பேரும், ராணிப்பேட்டையில் 46 பேரும், தஞ்சாவூரில் 36 பேரும், ஈரோட்டில் 31 பேரும், புதுக்கோட்டையில் 45 பேரும், தென்காசியில் 17 பேரும், கடலூரில் 16 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கு பாதிப்பு குறைவு

எங்கு பாதிப்பு குறைவு

தர்மபுரியில் 17 பேரும், கருரில் 5 பேர், கிருஷ்ணகிரியில் 7 பேர், நாகப்பட்டினத்தில் 6 பேர், நாமக்கல் 12 பேர், நீலகிரியில் 5 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூரில் 26 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும், திருவாரூரில் 11 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும், விழுப்புரத்தில் 4 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கொரோனா நிலவரம்

மாவட்ட கொரோனா நிலவரம்

தமிழகத்தில் ஜூலை 12ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இதுவரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 513
  • செங்கல்பட்டு 8120
  • சென்னை 77338
  • கோவை 1261
  • கடலூர் 1526
  • தர்மபுரி 241
  • திண்டுக்கல் 787
  • ஈரோடு 380
  • கள்ளக்குறிச்சி 1791
  • காஞ்சிபுரம் 3606
  • கன்னியாகுமரி 1306
  • கரூர் 201
  • கிருஷ்ணகிரி 253
  • மதுரை 6078
  • நாகப்பட்டினம் 347
  • நாமக்கல் 174
  • நீலகிரி 183
  • பெரம்பலூர் 175
  • புதுக்கோட்டை 615
  • ராமநாதபுரம் 1849
  • ராணிப்பேட்டை 1509
  • சேலம் 1867
  • சிவகங்கை 862
  • தென்காசி 683
  • தஞ்சாவூர் 687
  • தேனி 1729
  • திருப்பத்தூர் 414
  • திருவள்ளூர் 6655
  • திருவண்ணாமலை 3076
  • திருவாரூர் 708
  • தூத்துக்குடி 2261
  • திருநெல்வேலி 1758
  • திருப்பூர் 297
  • திருச்சி 1504
  • வேலூர் 2772
  • விழுப்புரம் 1459
  • விருதுநகர் 2073
    • விமான நிலைய கண்காணிப்பில் 574
    • (வெளிநாடு)

      • விமான நிலைய கண்காணிப்பில் 407
      • (உள்நாடு)

        • ரயில் நிலைய கண்காணிப்பில்: 422

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+