34 மாவட்டங்களில் பாதிப்பு.. சென்னையை தொடர்ந்து கடலூர், வேலூர், மதுரையிலும் கிடுகிடு.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அதேநேரம் கடலூர், காஞ்சிபுரம், மதுரை, வேலூரில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 2480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 1,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 420
  • செங்கல்பட்டு 3745
  • சென்னை 41172
  • கோவை 268
  • கடலூர் 765
  • தர்மபுரி 35
  • திண்டுக்கல் 305
  • ஈரோடு 85
  • கள்ளக்குறிச்சி 387
  • காஞ்சிபுரம் 1159
  • கன்னியாகுமரி 168
  • கரூர் 115
  • கிருஷ்ணகிரி 63
  • மதுரை 705
  • நாகப்பட்டினம் 202
  • நாமக்கல் 94
  • நீலகிரி 29
  • பெரம்பலூர் 150
  • புதுக்கோட்டை 70
  • ராமநாதபுரம் 299
  • ராணிப்பேட்டை 470
  • சேலம் 335
  • சிவகங்கை 75
  • தென்காசி 241
  • தஞ்சாவூர் 272
  • தேனி 200
  • திருப்பத்தூர் 68
  • திருவள்ளூர் 2,534திருவண்ணாமலை 1,060
  • திருவாரூர் 218
  • தூத்துக்குடி 577
  • திருநெல்வேலி 640
  • திருப்பூர் 123
  • திருச்சி 266
  • வேலூர் 477
  • விழுப்புரம் 581
  • விருதுநகர் 203
  • விமான நிலைய கண்காணிப்பில்: 262

(வெளிநாடு)

  • விமான நிலைய கண்காணிப்பில் 138

(உள்நாடு)

  • ரயில் நிலைய கண்காணிப்பில்: 401

.

எங்கு பாதிப்பு

எங்கு பாதிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 121 பேருக்கும், திருவள்ளூரில் 120 பேருக்கும், கடலூரில் 90 பேருக்கும், வேலூரில் 87 பேருக்கும், திருவண்ணாமலையில் 76 பேருக்கும், மதுரையில் 68 பேருக்கும், தஞ்சாவூரில் 44 பேருக்கும் திருச்சியில் 35 பேருக்கும் கொரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் 26

திண்டுக்கல்லில் 26

ராமநாதபுரத்தில் 30 பேருக்கும், திண்டுக்கல்லில் 26 பேருக்கும், திருவாரூரில் 26 பேருக்கும், தென்காசியில் 22 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 24 பேருக்கும், விழுப்பரத்தில் 22 பேருக்கும், திருநெல்வேலியில் 25 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 12 பேருக்கும், அரியலூரில் 6 பேருக்கும், தர்மபுரியில் 5 பேருக்கும், ஈரோட்டில் 7 பேருக்கும், கரூரில் 6 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும், நாமக்கல்லில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

குறைவான பாதிப்பு

குறைவான பாதிப்பு

புதுக்கோட்டையில் ஒருவருக்கும், ராணிப்பேட்டையில் 2 பேருக்கும், சிவகங்கையில் 7 பேருக்கும், தேனியில் 7 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும், திருப்பூரில் 4 பேருக்கும், விருதுநகரில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இன்று பாதிக்கப்படாத மாவட்டம் என்றால் நீலகிரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்ல. மற்ற எல்லா மாவட்டங்களில் தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகி உள்ளது.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25,863 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 757 பேர் உயிரிழந்துவிட்டனர். 32,754 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 17683 பேரும், செங்கல்பட்டில் 1762 பேரும், திருவள்ளூரில் 1257 பேரும், காஞ்சிபுரத்தில் 561 பேரும், திருவண்ணாமலையில் 598 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மதுரையில் 316 பேரும், தூத்துக்குடியில் 207 பேரும், திருநெல்வேலியில் 208 பேரும் வேலூரில் 368பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+