17 மாவட்டங்களில் 100க்கு கீழ் குறைவான பாதிப்பு..5 மாவட்டங்களில் மட்டுமே தொற்று கிடுகிடு..முழு லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 17 மாவட்டஙகளில் 100க்கும் குறைவான நபர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் வெறும் 49,203 மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை, கோவை, கடலூர், சேலம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் நேற்று 50,213 பேர்நோயாளிகாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 49,203 மட்டுமே மட்டுமே நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று மட்டும் 6,516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 10854 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 3891 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மூன்றாவதாக கடலூர் மாவட்டத்தில் 3707 பேரும், செங்கல்பட்டில் 2468 பேரும், சேலத்தில் 2046 பேரும், ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்

சென்னை கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை இப்போது பார்ப்போம். சென்னையில் கொரோனாவால் இன்று 993 பேர் பாதிக்கப்பட்டுளளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 445 பேரும், கடலூரில் 344 பேரும், சேலத்தில் 279 பேரும், திருவள்ளூரில் 281 பேரும், செங்கல்பட்டில் 237 பேரும், திருவண்ணாமலையில் 142 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினத்தில் அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 96 பேரும், ஈரோட்டில் 90 பேரும், கள்ளக்குறிச்சியில் 114 பேரும், கன்னியாகுமரியில் 136 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 63 பேரும், நாகப்பட்டினத்தில் 172 பேரும், புதுக்கோட்டையில் 118 பேரும், ராணிப்பேட்டையில் 108 பேரும், தர்மபுரியில் 114 பேரும், தஞ்சாவூரில் 131 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் உயர்வு
திருவாரூரில் 127 பேரும், தூத்துக்குடியில் 58 பேரும், திருநெல்வேலியில் 139 பேரும், திருச்சியில் 98 பேரும், வேலூரில் 140 பேரும், விழுப்புரத்தில் 139 பேரும், விருதுநகரில் 90 பேரும், கிருஷ்ணகிரியில் 75 பேரும், கரூரில் 38 பேரும், நாமக்கல்லில் 93 பேரும், நீலகிரியில் 69 பேரும், ராமநாதபுரத்தில் 40 பேரும், அரியலூரில் 44 பேரும். பெரம்பலூரில் 15 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,516 பேர் குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,23,231
ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1154 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 580 பேரும், சேலத்தில் 588 பேரும் கடலூரில் 3292 பேரும், செங்கல்பட்டில் 386 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications