தமிழகத்தில் மாவட்டவாரியான கொரோனா அப்டேட்... சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா!!
சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1306 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 434 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சில நாட்களாக சேலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இன்று 326 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் சென்னையை அடுத்து கோவையும், சேலமும் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகின்றன. இரண்டாம் இடத்தில் இருந்து வந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 283 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்னும் 4,898 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் 12,595 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் சென்னையில் கொரோனாவுக்கு 25 பேரும், கோவையில் ஒருவரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் இன்று 156 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் மூவரும், வேலூரில் மூவரும், திருவள்ளூரில் 6 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சேலத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். 326 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரைக்கும் மொத்தம் 1,75,484 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டில் 37,757 பேருக்கும், கோவையில் 35,000 பேருக்கும், திருவள்ளூரில் 33,746 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 22,851 பேருக்கும், சேலத்தில் 21,716 பேருக்கும், கடலூரில் 21,013 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 51,071 பேருக்கும், 30,289 பெண்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 13-60க்கு இடைப்பட்ட வயதினரில் 3,16,740 ஆண்களுக்கும், 2,07,872 பெண்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 12 வயதுக்கு கீழே இருப்பவர்களில் 12818 சிறுவர்களுக்கும், 11587 சிறுமிகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications