ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? நாளை முதல் வருது கட்டுப்பாடு! ‘இதை’ மறந்தால் உள்ளே நுழைய முடியாது!
சென்னை: கோடை காலங்களில் தமிழகத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் இ-பாஸ்ஸை நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இந்த நிலையில் நாளை முதல் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படி கோடைக்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதை கவனத்தில் கொண்டு பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விபரங்களான பயணிக்கும் வாகனங்களின் பதிவெண், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கம் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கோடை கொடைக்கானல், நீலகிரியை சுற்றிப்பார்க்கவும் வரும் சுற்றுலா பயணிகள் முறையான இ-பாஸுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும். இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் ஊட்டி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என கடந்த 13ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம்.
அதே நேரத்தில் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கொட்டைநாடு, காணி, பள்ளியார், குஞ்சப்பனை, கக்கனல்லா, தேவாலா ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனை சாவடியில் சோதனை நடத்தப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொடைக்கானலில் பிற பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டேன்ஸ் ஆடும் போது தகராறு.. கார் ஏற்றி இளம்பெண் கொலை! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications