வாழும் பெரியாராக.. தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார் ஸ்டாலின்.. புகழ்ந்து தள்ளிய உதயநிதி!
சென்னை: அன்று குலக்கல்வி திட்டத்தை பெரியார் எதிர்த்துப் போராடியதை போல், இன்று தேசிய கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வருவதாகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த ஸ்டாலினை வாழும் பெரியாராக பார்ப்பதாகக் கூறிய அவர், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும் முன்னெடுப்பது இது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு 2 ஆண்டுகளாக ஆய்வு செய்து பல்வேறு கூட்டங்களை நடத்தி, கடந்த ஆண்டு மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த நிலையில் சுமார் ஓராண்டுக்கு பின் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், சங்ககாலம் முதலே தமிழர்கள் கல்வி சிறந்து விளங்கினார்கள். ஆனால் இடையில் ஏற்பட்ட சில வரலாற்றுச் சூழ்ச்சியால் தடை ஏற்பட்டது. அந்த தடை இயல்பாக ஏற்பட்டது அல்ல. கல்வி உரிமை மக்களுக்குத் தடுக்கப்பட்டது. அப்படி கல்வி உரிமையைப் பெற்றுக் கொடுக்க உருவான இயக்கம் தான் திராவிட இயக்கம்.
போராடிப் பெற்ற கல்வியைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கில் இப்போதும் சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இட ஒதுக்கீடு எதிர்ப்பு, குலக்கல்வி திட்டம், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்று பல வழிகளில் கல்வி உரிமையைச் சிதைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. குலக்கல்வி என்பது பாதி நேரம் படிக்க வேண்டும், பாதி நேரம் குலத் தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த திட்டம்.
அதனை எதிர்த்து பெரியார் போராடியதால் தான், அந்த திட்டம் தமிழ்நாட்டில் இருந்து அழித்தது. தற்போது புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றும் அந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர் தான் முதல்வர் ஸ்டாலின்.
உங்களின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது, தமிழ்நாட்டுக்கு என்று தனியாகக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என்று துணிச்சலுடன் சொன்னார். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று தைரியமாக சொன்னவர் முதல்வர் ஸ்டாலின். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. இதன்பின் அதனை ஒத்திசைவு பட்டியலில் சேர்த்தார்கள்.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டின் கல்வி மீது பல்வேறு தாக்குதல் நடந்து வருகின்றன. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான தொடக்கமாகவே தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையைப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications