'வெற்றிப் பள்ளிகள் திட்டம்' அடையாளம் தெரியாமல் மாறும் 500 அரசுப் பள்ளிகள்.. அன்பில் மகேஷ் அப்டேட்!
சென்னை: பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சுமார் 500 யூனியன்களை தேர்வு செய்து 500 பள்ளிகளை இந்த வெற்றிப் பள்ளிகள் திட்டத்தில் இணைக்க உள்ளதாகவும், இதன் மூலமாக மாடல் பள்ளிகளில் கிடைக்கும் வசதிகள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாகப் பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்படி தமிழ்நாட்டில் இனி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மாணவர்களின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சியாகும். அதனால் பள்ளிகளை மேம்படுத்த வெற்றிப் பள்ளிகள் திட்டம் விரைவில் தொடங்கப்படும். மாநில கல்விக் கொள்கை இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருகிறது. மாணவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது என்பதற்காக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் தொடரும். இனி வரும் காலங்களில் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு திட்டம் அமலுக்கு வந்தது என்று தெரிவித்தார். தொடர்ந்து வெற்றிப் பள்ளிகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதுதொடர்பாக அன்பில் மகேஷ் பேசுகையில், பயிற்சிப் பார்வை என்ற ஒரு திட்டம் மூலமாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். அதேபோல் டெக்னாலஜியில் ஆசிரியர்கள் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். வெற்றிப் பள்ளிகள் திட்டம் என்பது ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாடல் பள்ளிகள் இருக்கிறது.
இதனை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும். அதனால் ஒரு யூனியனுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 500 யூனியனில் உள்ள பள்ளிகளை வெற்றிப் பள்ளிகள் திட்டத்திற்குள் கொண்டு வரப் போகிறோம். இதனை அறிவிப்பாக இல்லாமல், தொடர்ந்து விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். இன்று 900ஆக இருக்கும் கணக்கு, நாளை 9 ஆயிரமாக மாற வேண்டும்.
அதேபோல் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவுத் திருவிழா என்று கூறினார். இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவுத் திருவிழா நடத்தும் வகையில் மாநில கல்விக் கொள்கையின் தாக்கல் இருக்கும். குழந்தைகள் சக மாணவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து, இலக்கை பெரிதாக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்த உள்ளோம்.
இந்த கொள்கை அறிவியல் சார்ந்தது. இதில் பிற்போக்குத்தனங்கள் இருந்துவிடக் கூடாது. அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்பதே இலக்கு. அதேபோல் ஆசிரியர்கள் புதிய சிந்தனைகளுடன் பாடங்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் மாநில கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications