முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன?
சென்னை: தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாள் வந்தேவிட்டது! 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கும், மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும்.
அசாம் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
கேரளா சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் : மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்
மேற்கு வங்கத்தில், ஏப்ரல் 23 (முதற்கட்டம்) மற்றும் ஏப்ரல் 29 (இரண்டாம் கட்டம்) ஆகிய இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேதி அறிவிக்கப்பட்ட இந்த நொடியில் இருந்தே தமிழகத்தில் 'தேர்தல் நடத்தை விதிமுறைகள்' (Model Code of Conduct - MCC) அமலுக்கு வரும். 'அப்படினா என்ன? இனி என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?' - ஒரு குயிக் லுக்!

1. நடத்தை விதிகள் என்றால் என்ன?
தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், ஆளும் கட்சிகள் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளே இந்த MCC. இது இன்று மாலை தொடங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
2. ஆளும் கட்சி மற்றும் அமைச்சர்களுக்குப் பூட்டு!
புதிய திட்டங்கள் கிடையாது: இன்று மாலைக்கு மேல் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என எதுவுமே இனி 'நோ நோ' தான்.
அரசு இயந்திரம்: அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது.
விளம்பரங்கள்: அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.
3. அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டியவை:
விமர்சனங்கள்: எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றி விமர்சிப்பது விதிகளுக்கு எதிரானது.
மத உணர்வுகள்: ஜாதி, மதம் அல்லது மொழி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கைக்கும், தகுதி நீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
அனுமதி கட்டாயம்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அந்தந்தப் பகுதி காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
4. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
பணப் புழக்கம்: 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
புகார் அளிக்க 'C-Vigil': உங்கள் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலோ அல்லது விதிமீறல்கள் நடந்தாலோ 'cVIGIL' ஆப் மூலம் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் புகார் அளிக்கலாம். 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி ஐஏஎஸ் அதிகாரிகள் கையில்!
தேதி அறிவிக்கப்பட்ட பின், முக்கிய முடிவுகள் அனைத்தும் தலைமைச் செயலாளர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளாகப் பொறுப்பேற்பார்கள்.
தேர்தல் திருவிழாவின் 'கவுண்ட்டவுன்' தொடங்கிவிட்டது. உங்கள் தொகுதியில் யார் வேட்பாளர்? என்ன கூட்டணி? அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்!
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!











Click it and Unblock the Notifications