சென்னையில் முகாமிட்ட மத்திய உளவுத்துறை.. என்னாச்சு? மோடியிடம் கிசுகிசுத்த எடப்பாடி.. சம்பவம் ரெடி
சென்னை: தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உளவுத்துறை இங்கே முகாமிட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பது பற்றி ரிப்போர்ட் வழங்குவதற்காக சென்னையில் மத்திய உளவுத்துறை முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனேவே ஆளும் திமுக அரசு உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது. திமுக வட்டாரங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்படி, இந்தக் கருத்துக்கணிப்புகள் ஐந்து கட்டங்களாக நடத்தப்பட உள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி - பிரதமர் மோடியுடன் போனில் பேசினார். சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தூத்துக்குடியில் பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் போது அவருடன் அதிமுக மாஜி அமைச்சர்களும் உடன் இருந்தனர். எடப்பாடி - மோடி இடையே தனியாக சந்திப்பு நடக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி - மோடி இடையே தனிப்பட்ட உரையாடல் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 10 நிமிடம் தனியாக பேசி உள்ளனர். போனில் சில முக்கியமான விஷயங்களை உரையாடி உள்ளனர். தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி பேசி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதேபோல் திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
முக்கியமாக 3 திமுக அமைச்சர்கள் பெயரை சொல்லி அவர்களின் வழக்குகளை விசாரிப்பதை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். திமுகவிற்கு எதிராக வியூகங்களை வகுக்க மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் தேவை என்றும் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் கேட்டு உள்ளார். இதையடுத்தே சென்னையில் மத்திய உளவுத்துறை தற்போது மையமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவின் தேர்தல் வியூகங்கள்
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் உளவுத்துறை மூலம் இதுபோன்ற கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கம்தான். இதன் மூலம், அவர்கள் தங்களுக்குச் சாதகமான தொகுதிகள், வலிமையான இடங்கள், கூட்டணி கட்சிகளுக்கு சாதகமான இடங்கள், பலவீனமான இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள்.
ஒவ்வொரு கட்ட கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், வலுவான வேட்பாளர் யார், எந்த வாக்குறுதிகள் அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்படும். இதன் அடிப்படையிலேயே, சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை உளவுத்துறை விரைவில் நடத்தவுள்ளது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன, தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்தும் இந்த கருத்துக்கணிப்பில் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வின் முடிவுகள், எதிர்வரும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திமுகவிற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வது வழக்கமான நடைமுறையாகும். இந்த நடைமுறை மூலம், தங்கள் கட்சிக்கு சாதகமான அம்சங்கள், கூட்டணி கட்சிகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பலவீனமான பகுதிகளை ஆராய உதவுகிறது. இதன் மூலம், தேர்தல் உத்திகளை வகுக்க ஒரு தெளிவான புரிதலை பெற முடியும்.
கருத்து கணிப்பு தொடங்கும்
விரைவில் இந்த கருத்து கணிப்புகள் தொடங்க உள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தலுக்குத் தேவையான உத்திகளை வகுப்பதற்கு திமுகவுக்கு உதவும். மேலும், எந்தெந்த வாக்குறுதிகளை அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம், தேர்தல் பிரச்சாரங்களைச் சிறப்பாக வடிவமைக்க முடியும்.
கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, வாக்குறுதிகளைத் திட்டமிடுவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்த முடிவுகள், கட்சியின் வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆளும் கட்சி உளவுத்துறை மூலம் நடத்தும் இந்தக் கருத்துக்கணிப்புகள் மற்ற கணிப்புகளை விட துல்லியமாக இருக்கும். மற்ற கணிப்புகளை விட பாரபட்சம் இன்றி உண்மையான கிரவுண்டு நிலவரத்தை கொடுக்கும். பொதுவாக தேர்தலுக்குத் தயாராவதற்கு முக்கியமான ஒரு கருவியாகும். இதன் மூலம், கட்சியின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து, அதற்கேற்ற வியூகங்களை வகுத்துக் கொள்ள முடியும்.
திமுக உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்பு
ஆளும் திமுக அரசு, விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி, கட்சியின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகள், திமுகவின் தேர்தல் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க உதவும். மேலும், கட்சியின் பிரச்சாரங்களைச் சிறப்பாக வடிவமைக்கவும், மக்களுக்குச் சரியான வாக்குறுதிகளை வழங்கவும் இது உதவும்.
இந்த ஆய்வின் முடிவுகள், திமுகவின் தேர்தல் வியூகங்களுக்கு வழிகாட்டும். மேலும், வலுவான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இது உதவும். இந்தப் பணிகளுக்காக, உளவுத்துறை விரைவில் களமிறங்க உள்ளது. அவர்களின் இந்த நடவடிக்கை, தேர்தல் களத்தில் திமுகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications