ரூ.50-க்கு 1 பொங்கல்.. 2 இட்லி ரூ.19.50.. இதெல்லாம் முடியாது.. மொத்தமா திரண்ட அரசியல் கட்சிகள்.. ஏன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 இட்லி 20 ரூபாயா? என்று அதிர்ந்து போயிருக்கிறார்களாம் மாவட்ட கலெக்டர்கள்.. இதுகுறித்து பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாம். என்ன நடந்தது?

வழக்கமாக, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும், ஓட்டுப்பதிவுக்கு முன்பு, 3 முறை, தேர்தல் செலவு கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதியாகும். அதேபோல, தேர்தல் முடிந்த பிறகு, இறுதி செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

Tamil Nadu election officer Sathyaprada sahu says about Idli price and what are the Major request to Election Commission

செலவு கணக்கு: தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவை கண்காணித்து, நிழல் கணக்கு ஒன்றை பராமரித்து வருவார்கள்.. வேட்பாளர் செலவு கணக்குடன் அதை ஒப்பிட்டு பார்த்து, குறைவாக இருந்தால் அதற்குரிய விளக்கம் கேட்பார்கள்.. இது அடிப்படையான தேர்தல் விதியாகும்.

அந்தவகையில், தற்போது தேர்தல் வரப்போகிறது.. தேர்தல் தேதியும் அறிவித்தாகிவிட்டது.. தேர்தல் செலவினங்கள் குறித்து அரசியல் கட்சிகளிடம் விவாதிக்க 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தந்த மாவட்டத்தில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கட்டண விவரங்கள்: அந்த கூட்டத்தில், ஒவ்வொரு அரசியல்கட்சியும் தனது வேட்பாளர்களுக்காக செலவிடப்படும் தினசரி செலவுகளை அந்த வேட்பாளர்களின் செலவுப் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை கலெக்டர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதற்காக, தினசரி செய்யப்படும் உணவு செலவுகளில் இருந்து, விளம்பரங்கள் செய்வது வரை அனைத்திற்குமான கட்டண விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

உதாரணமாக இரண்டு இட்லி 19 ரூபாய் 50 காசுகள் , ஒரு பொங்கல் 50 ரூபாய், பரோட்டோ 65 ரூபாய் என தேர்தல் கமிஷன் நிர்ணயித்த விலை பட்டியலை சொல்லியுள்ளனர் கலெக்டர்கள்.

அரசியல் கட்சிகள்:இதனை ஏற்க மறுத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சென்னை போன்ற பெரு நகரங்களில் விற்கப்படும் விலையை மாவட்ட கிராமங்களுக்கும் நிர்ணயித்தால் எப்படி? கிராமப் புறங்களில் 1 இட்லி 5 ரூபாய்க்கும், பொங்கல் 20 ரூபாய்க்கும் கிடைக்கும் போது அதற்கு அதிக விலை நிர்ணயித்தால் எப்படி?

அது மட்டுமல்லாமல், ஆட்களை வைத்து மொத்தமாக தயாரித்தும் தேர்தல் பணியில் உள்ள தொண்டர்களுக்கு வழங்குவோம் ; அப்போது இதை விட விலை குறைவாகத் தான் வரும். அதனால் உங்கள் விலை நிர்ணயத்தை ஏத்துக்க முடியாது. அந்தந்த பகுதிகளில் குறைந்த பட்சம் எந்த விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதோ அதைத்தான் நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பஞ்சாயத்து: இந்த பஞ்சாயத்து இப்போது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம் போயிருக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் விவாதித்துள்ளார் சத்யபிரதா சாஹூ! அரசியல் கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பது இனிதான் தெரியும் என்கிறார்கள்.

அனைத்து பொருட்களுக்கும் கட்டணம் அதிகம் என்று அரசியல் கட்சியினர் மாவட்ட கலெக்டர்களிடம் புகார் தெரிவித்துள்ளதாலும், விலையை குறைத்து புது பட்டியல் வெளியிடும்படி வலியுறுத்தியிருப்பதாலும், இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+