அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தேர்தல் ஆணையத்துக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றன.
மார்ச் 30, 2026 நிலவரப்படி, இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.296 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.61.98 கோடி ரொக்கம், ரூ.1.17 கோடி மதிப்பிலான மதுபானங்கள், ரூ.8.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் ரூ.197.35 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். தேர்தலை நேர்மையாக நடத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் நீண்ட நேரம் பணியாற்றும் பணியாளர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ.1,700-இல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ.1,300-இல் இருந்து ரூ.2,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.850-இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் உதவியாளர் ஊதியம் ரூ.650-இல் இருந்து ரூ.1,400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நுண் பார்வையாளர் (Micro Observer) ஊதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு நேரடி நன்மை அளிக்கும் என கூறப்படுகிறது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications