தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓட்டு போட சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வோருக்கு இன்று இரவு சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. இதேபோல் நாளை இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு சென்னை தாம்பரத்திற்கு நாளை மறுநாள் காலை வருகிறது.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.. இந்த தேர்தல் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பலரும் நாளை முதல் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.. நாளையும் நாளை மறுநாளும் பொதுமக்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டள்ளது.

Tamil Nadu election train Don t miss the Tambaram to Tirunelveli special train Check it out now

சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இன்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது.. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல் , மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு அதிகாலை 4.40க்கு சென்றடைகிறது. இந்த ரயில் ஏப்ரல் 18, 20 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் (ஏப்ரல் 19, 21 தேதி) தேர்தல் சிறப்பு ரயில் இரவு 8.30க்கு புறப்பட்டு, நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு காலை 9.20க்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் சென்னை எழும்பூர் - கோவை - சென்னை எழும்பூர் வழி தஞ்சாவூர், திண்டுக்கல், பழனி , பொள்ளாச்சி வழியாக கோவை வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது இந்த ரயில் வியாழன் (இன்று புறப்பட்டு விட்டது) மற்றும் சனிக்கிழமை (18, 20ம் தேதி) சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.25க்கு புறப்பட்ட நிலையில், தாம்பரம் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு நாளை காலை 8.20க்கு செல்கிறது

அதேபோல் மறுமார்க்கமாக கோவையில் வரும் வெள்ளி (நாளை) மற்றும் ஞாயிறுகளில் (19, 21 தேதி) இரவு 8.40க்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூரை மறு நாள் காலை 10.05க்கு ரயில் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த இரு ரயில்களை தவிர சென்னையில் இருந்து பெங்களுர் மார்க்கமாகவும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்த ரயில்களும் இன்று புறப்பட்டு செல்கின்றன. அடுத்ததாக ஓட்டு போட்டுவிட்டு சென்னை திரும்ப வசதியாக திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் அறிவித்துள்ளது.

ஓட்டு போட சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்வோருக்கும் இன்று இரவு 9.50க்கு சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் நாளை காலை 11.15க்கு திருநெல்வேலி செல்கிறது. இதேபோல் நாளை இரவு 7 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு சென்னை தாம்பரத்திற்கு நாளை மறுநாள் காலை (சனிக்கிழமை) 8.45க்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+