சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க!
சென்னை: டாக்டர் ராமதாசும்-சசிகலாவும் இணைந்து கூட்டணியை உருவாக்கியிருக்கும் சூழலில், பாமக-அ.இ.பு.த.ம.மு.க. கூட்டணி என்கிற பெயரிலேயே இயங்கலாமா? அல்லது கூட்டணிக்கு ஒரு புதிய பெயரை வைக்கலாமா? என்கிற ஆலோசனையும் தோட்டத்தில் நடந்திருக்கிறது.
கூட்டணிக்கான நல்ல பெயரை பரிந்துரைப்பவர்களுக்கு பரிசு தரப்படும் என டாக்டர் ராமதாஸ் சொல்லியிருப்பதால், ராமதாஸ் ஆதரவாளர்கள் பலரும் கூட்டணிக்கான பெயரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

விழுப்புரம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக, ராமதாஸ் தரப்பு பாமகவுடன் இணைந்து தமிழகம், புதுச்சேரி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி
தமிழக மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்திருப்பதாக ராமதாஸ் கூறியிருக்கிறார். கூட்டணி, 234 தொகுதிகளும் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தேர்தலை எதிர்கொள்ள, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் முழு வேகத்துடன் தயாராகி வருகிறது. மறுபுறம் இரு அணியாக செயல்பட்டு வந்த, பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு அணி, அதாவது அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டாக்டர் ராமதாசும்-சசிகலாவும் இணைந்து கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
இந்த சூழலில், இவர்களின் கூட்டணி குறித்து அதிமுக-பாஜக தலைமைக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்தபோது, ''சசிகலாவுடன் கூட்டணி வைக்க ஆரம்பத்தில் ராமதாசுக்கு உடன்பாடில்லை. அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக மட்டும் நமது சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி அவர்களின் வெற்றியைத் தடுக்கலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தார் ராமதாஸ். ஆனால், இது வொர்க் அவுட் ஆகாது என நினைத்தது திமுக.
ஒரு கூட்டணியாக தேர்தல் களம்
இருவரையும் இணைத்து ஒரு கூட்டணியாக தேர்தல் களத்தில் நின்றால் அது பேசு பொருளாகும். அப்போதுதான், ராமதாஸ் - சசிகலாவின் தேர்தல் பிரச்சாரம் அதிமுக-பாஜகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிக்க உதவும் என திட்டமிட்ட திமுக தலைமை, ராமதாசிடமும் சசிகலாவிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும் கூட்டணியாக உருவாக்க வைத்திருக்கிறது. முந்தைய காலங்களில், ஜெயலலிதாவின் முயற்சியில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது போல !
இவர்கள் இருவரையும் இணைத்து வைத்தது திமுகதான். அதற்கேற்ப, ராமதாசின் தேர்தல் செலவுகளுக்கு கனிசமான தொகையை திமுக தரப்பிலிருந்தும், மீதமுள்ள தொகையை சசிகலாவும் தருவதாக வாக்குறித்தி கொடுத்தப்பிறகு இந்த கூட்டணி உருவாகியிருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணிக்கான வாக்குகளை பிரிப்பது மட்டுமே திமுகவின் திட்டம். அதற்கான அனைத்து வழிகளையும் பணத்தால் உருவாக்கி வருகிறது என எங்கள் தலைமைக்கு தகவல் தந்துள்ளனர்'' என்கிறார்கள் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications