விசித்திரமா இருக்கே.. தமிழ்நாட்டிற்கு தாமதமாக தேர்தல் ஏன்? தேர்தல் ஆணையம் வைத்த பெரிய ‘ட்விஸ்ட்’
சென்னை: தமிழக அரசியலில் இது ஒரு விசித்திரமான சீசன். வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வந்தாலே, அடுத்த சில வாரங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராகிவிடும். ஆனால், 2026-ன் தேர்தல் காலண்டர் சற்று 'திணற' வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முதல் கட்டத்தில் இல்லையா தமிழகம்?
கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களைத் திரும்பிப் பார்த்தால், இந்தியாவிலேயே தேர்தல் திருவிழாவைத் தொடங்கி வைக்கும் 'ஃபர்ஸ்ட் பெஞ்ச்' மாநிலமாகத் தான் தமிழ்நாடு இருக்கும். முதல் கட்டத்திலேயே வாக்குப் பதிவை நடத்தி முடித்துவிட்டு, ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணுவது தான் நம்ம ஊர் ஸ்டைல்.

ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் ஒரு பெரிய 'ட்விஸ்ட்' வைத்திருக்கிறது. மார்ச் 15-ம் தேதி தேர்தல் அட்டவணை வெளியாகி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ம் தேதி தான் வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் இடையே சுமார் 39 நாட்கள் இடைவெளி! இவ்வளவு நீண்ட காலம் தேர்தல் களம் தகிப்பது கடந்த காலங்களில் அரிதான ஒன்று.
மேற்கு வங்கத்தில் குறைந்தது... தமிழகத்தில் நீடித்தது!
தேர்தல் என்றாலே ரத்தமும் சதையுமாகப் பார்க்கப்படும் மேற்கு வங்கத்தில், இந்த முறை கட்டங்கள் (Phases) குறைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான். கடந்த முறை 8 கட்டங்களாக நடந்த தேர்தல், இந்த முறை வெறும் 2 கட்டங்களோடு சுருங்கிவிட்டது. அங்கே கெடுபிடி குறையும் என எதிர்பார்த்த நிலையில், தமிழகத்தை மட்டும் தனியாகப் பிரித்து, தேர்தலைத் தள்ளி வைத்திருப்பது தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக். தமிழ்நாட்டிற்கு கிட்டத்தட்ட ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் போல தனியாக அறிவித்துள்ளனர்.
"ஏப்ரல் 23-ம் தேதி தான் தேர்தல்... அதுவரை அரசியல் கட்சிகளின் பண பலமும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளும் எப்படி இருக்கப் போகின்றன?" என்பது தான் சாமானிய மக்களின் மைண்ட் வாய்ஸ்.
இதிலிருக்கும் சவால்கள்:
கடும் வெயில்: ஏப்ரல் மாத இறுதியில் கத்திரி வெயில் ஆரம்பிக்கும் நேரத்தில் தேர்தலை வைத்திருப்பது வாக்காளர்களையும், பரப்புரை செய்பவர்களையும் சோதிக்கும்.
பணப் புழக்கம்: நீண்ட கால இடைவெளி என்பதால், களத்தில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தேர்தல் ஆணையத்திற்குப் பெரிய சவாலாக இருக்கும்.
பரப்புரை அலுப்பு: 40 நாட்கள் வரை ஒரே மாதிரியான பரப்புரைகளைக் கேட்டு மக்கள் சலிப்படையவும் வாய்ப்புண்டு.
மேற்கு வங்கத்தில் கட்டங்கள் குறைந்த நிலையில், தமிழகத்தில் ஏன் தாமதமாக தேர்தலை நடத்த வேண்டும்? இது 'திட்டமிட்ட வியூகமா' அல்லது 'நிர்வாக வசதியா' என்பதை தேர்தல் ஆணையம் தான் விளக்க வேண்டும். எது எப்படியோ, ஏப்ரல் 23-க்காகத் தமிழகம் இப்போதே தயாராகத் தொடங்கிவிட்டது!
வழக்கமாகத் தேர்தல் திருவிழாவின் க்ளைமாக்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை, கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள், அதாவது இரண்டு நாட்களில் தொடங்கிவிடுவதுதான் மரபு. ஆனால் இந்த முறை ஏப்ரல் 29-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ம் தேதி தான் எண்ணிக்கை என அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.
4 நாட்கள் இடைவெளி ஏன்?
ஏப்ரல் 23-ம் தேதியே தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் சென்றடைந்திருக்கும் நிலையில், மீதமுள்ள மேற்கு வங்கத்தின் சில தொகுதிகளுக்காக மட்டும் ஏன் இந்த நான்கு நாள் இடைவெளி என்கிற கேள்வி எழுகிறது. வெறும் இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய இறுதிக்கட்டப் பணிகளுக்கு நான்கு நாட்கள் தேவைப்படுவது சற்று விசித்திரமாகவே உள்ளது. இந்த நீண்ட இடைவெளி, பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, அரசியல் கட்சிகளிடையே ஒருவித பதற்றத்தையும், 'ஸ்ட்ராங் ரூம்' பாதுகாப்பு குறித்த கூடுதல் கவலையையுமே விதைத்திருக்கிறது.
-
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது?












Click it and Unblock the Notifications