மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. புதிய மின் இணைப்பு வழங்க கட்டிட பணி நிறைவு சான்று தேவை? சலுகையை பாருங்க
சென்னை: புதிய மின் இணைப்பு வழங்குவதில், பொறியாளர்களுக்கு தமிழக மின்வாரியம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அது என்ன?
பொதுவாக, கட்டிட அனுமதி பெறுவோர், விதிமுறைகளுக்கு உட்பட்டு, கட்டிடங்களை கட்டியுள்ளனரா என்பதை உறுதி செய்ய, சி.சி. எனப்படும் பணி நிறைவு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, 3 வீடுகளுக்கு மேற்பட்ட குடியிருப்புகளை கட்டுவோர், கட்டுமான பணி நிறைவு சான்று பெற வேண்டும்.. இந்த சான்று பெற்ற பிறகுதான், குடிநீர், வடிகால், மின்சார இணைப்புகள் வழங்கப்படும்..

சான்றிதழ்: கட்டிடங்கள் கட்டும்போது, ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகளின்படி அரசு இந்த அனுமதியை அளிக்கிறது. இந்த கட்டிடம் கட்டிய பிறகே, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பணி நிறைவு சான்று பெற்று சமர்ப்பித்தால் தான் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
ஆனால், பணி நிறைவு சான்று கோரி விண்ணப்பித்தால் மாத கணக்கில் ஆகியும் கிடப்பில் போடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் கட்டுமான பணிகள் முடிந்தும் மின் இணைப்பு பெற முடியால் மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே, கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என விதிமுறைகளில் புதிய தளர்வுகளை மின்சார வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதுதொடர்பாக மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
மின் இணைப்பு: அதில், "தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை. 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு, 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள், அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை" என்று கடந்த ஜுன் மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பல இடங்களில் ஒரே கட்டடத்தில் தரைதளத்தில் கடை, மேல்தளத்தில் வீடு கட்டும்போது, கட்டிட நிறைவு சான்று கேட்பதாக புகார்கள் எழுந்தன. எனவேதான், வீடு, வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் இணைந்திருந்தாலும், கட்டட நிறைவு சான்று கேட்கக்கூடாது என, பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
அதிரடி அறிவிப்பு: வணிகப் பிரிவில், 300 சதுர மீட்டருக்கு உட்பட்ட கட்டிடத்தில், வீடு மற்றும் வணிக நிறுவனம் இணைந்து இருந்தாலும், புதிய மின் இணைப்பு வழங்க கட்டிட பணி நிறைவு சான்று கேட்கக்கூடாது என்று பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டிருப்பது பெருத்த கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications