சர்ப்ரைஸ் மின்சார வாரியம்.. டக்னு வந்த மெசேஜ் பார்த்தீங்களா? தமிழக மக்களுக்கு இனிமேல் நிம்மதி
சென்னை: தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் அனலடித்துக் கொண்டிருக்கும்நிலையில், முக்கிய நடவடிக்கை ஒன்று மின்வாரிய துறையில் எடுக்கப்பட்டுள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டில் எப்போதுமே மின்தேவை என்பது அதிகமாகவே இருக்கும்.. இந்த வருடம் ஜனவரியிலேயே, 17,000 மெகா வாட்டை மின்தேவை தாண்டிவிட்டது.

இப்போது கோடை வெயில் துவங்கிவிட்டதால், வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களில் மின் தேவையானது எப்படியும் 20,000 மெகாவாட்டை தாண்டும் என்கிறார்கள்..
பயன்பாடுகள்: காரணம் ஏசி, ஏர்கூலர், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாடுகள் வழக்கத்தைவிட அதிகளவில் இருக்கும்.. அத்துடன், தேர்தலும் நெருங்கிவிட்டதால் மின்தேவைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்.. இதை கணக்கிடும்போது, இனிமேல் நம்முடைய தினசரி மின்தேவையாவது 20, 744 மெகாவாட் அளவை தாண்டும் என்கிறார்கள்.
எனினும், பொதுமக்கள் பாதிப்படையாதவாறு, மின்சார துறை அனைத்து நடவடிக்கைகளையும் சீராக எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே தமிழகம் முழுவதும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டிருந்த நிலையில், மீட்டர் பாக்ஸ் பழுதடைந்தாலோ அல்லது மின்தடை ஏற்பட்டாலோ அல்லது கூடுதல் மின்கட்டண வசூலித்தாலோ, 94987 94987 என்ற எண்ணில் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நம்பிக்கை: அதுமட்டுமல்ல, வெயில் காலத்தில் மின் சாதனங்களில் ரிப்பேர் ஏற்பட்டால், அதனை விரைந்து சரிசெய்ய இரவு வரை அலுவலகங்களில் இருந்தபடி, மின் வினியோக பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு உதவி பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துகொண்டிருப்பதால், தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது...
முக்கிய உத்தரவு: தேர்தல் பிரச்சாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் வருகைதரும் இடங்களில் தடையற்ற மின்விநியோகம் செய்ய வேண்டும் என்று மின் தொடரமைப்புக் கழகத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறாராம்.. குறிப்பாக, "சம்பந்தப்பட்ட இடங்களில் பராமரிப்புப்பணிகளை முன்னதாகவே முடித்து தயாராக இருக்க வேண்டும். நிகழ்ச்சியின்போது, பராமரிப்புக்கான மின்தடை போன்றவற்றை செய்யக் கூடாது.
அந்த நேரத்தில் இயக்கப் பிரிவு தலைமைப் பொறியாளர்கள் துணை மின் நிலையங்களில் இருக்க வேண்டும். அவசர கால பணிகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு பிரிவினர் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் இருக்க வேண்டும். இதுபோன்ற பணிகளை தலைமைப் பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும்" என்றெல்லாம் அறிவுறுத்தியிருப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications