மழை காலம் நெருங்குது.. முகம் சிவந்த ஸ்டாலின்.. களமிறங்கிய இபி.. மின்சாரத்துறை சுளீர் அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு மின்சாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது. அதன் தாக்கம் காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடலில் வலுவான வடகிழக்கு காற்று வலுப்பெற்ற பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கூறியது.

புயல் உருவானது: அதன்படியே மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஹாமூன் புயலாக வலுப்பெற்று அதன்பின் கரையை கடந்தது.
வானிலை மையம் எச்சரிக்கை: இந்த நிலையில்தான் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு வாரத்திற்கு தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மின்சாரத்துறை: வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு மின்சாரத்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது.
பொதுவாக கனமழை மற்றும் சூறாவளி போன்ற சமயங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்படும் என்றாலும், மின்சார விநியோகத்தில் தடங்கலைத் தவிர்ப்பதற்காக, பருவமழைக்கு முந்தைய தயார்நிலை நடவடிக்கைகளை மின்சாரத்துறை அதிகாரிகள் எல்லா வருடமும் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டும் மின்சாரத்துறை தூண் பெட்டிகளின் உயரத்தை அதிகரிப்பது, மேல்நிலை மின் கம்பிகள் அறுந்து விழும் மரக்கிளைகளை கண்டறிந்து கத்தரிப்பது, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுவது, ஜம்பர்கள், கண்டக்டர்கள் மற்றும் சுவிட்சுகள் போன்ற புதிய மின் சாதனங்களை நிறுவுவது என பல தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மழை காலத்தில் மின்சாரம் தடை இன்றி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த பணிகளை மின்சாரத்துறை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.
ஸ்டாலின் உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மிகப்பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட பணிகளின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 10 லட்சம் உபகரணங்கள், சுவிட்சுகள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றப்பட்டன, இது சமீபத்திய மாதங்களில் பெய்த கனமழையின் போது தடையின்றி மின்சாரம் வழங்க உதவியது. நகரத்தில் கிட்டத்தட்ட 46,000 பணிகள் மேற்கொள்ளப்பட்டன, இது மாநிலத்திலேயே மிக அதிகமாகும்.
இதையடுத்து தற்போது மேலும் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். சென்னையில், வழக்கமான விநியோக மின்மாற்றிகளை ரிங் மெயின் யூனிட்டுகளாக (RMUs) மாற்றியதன் காரணமாகவும், தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளில் மின்சாரம் கசிவைத் தடுக்க மின்மாற்றிகள் மற்றும் தூண் பெட்டிகளின் அடிப்படை உயரத்தை அதிகரிப்பதாலும் மின்சாரத்துறை தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது. வடக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் தெற்கு 2 ஆகிய ஐந்து வட்டங்களை உள்ளடக்கிய 77 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் இந்த மழை காலத்தில் கண்டிப்பாக மின் தடை இருக்காது என்று மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications