பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு... தரவரிசைப் பட்டியல் ஒத்தி வைப்பு!!
சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிட இருந்த நிலையில் வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இன்று மாலை சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசை பட்டியலை வெளியிடுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், இது வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு கல்வியாண்டில், கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 458 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 877 இடங்கள் நிரப்பப்பட உள்ளது..
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications