கதறி அழுது ஜாமீன் பெற்ற மாஜி சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்! கைதுக்கு பின் கோர்ட்டில் நடந்தது தெரியுமா?
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தான் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் கதறி அழுது ஜாமீன் பெற்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். இவர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரது மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான பீலா வெங்கடேசன், ராஜேஷ் தாஸை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
மேலும் பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் (வெங்கடேசன் என்பது பீலாவின் தந்தை பெயர்) என மாற்றம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசனை மிரட்ட முயன்றதாக ராஜேஷ் தாஸ் மீது புகார் எழுந்தது. அதாவது தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயற்சித்து மிரட்ட முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் சார்பில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராஜேஷ் தாஸ் - பீலா வெங்கடேசன் ஆகியோரின் விவாகரத்து வழக்குக்கு இடையே இந்த புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவரை கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு போலீசாரை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சட்டப்பிரிவு 353 கீழ் ராஜேஷ் தாஸ் மீது இன்னொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 6 பிரிவுகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ராஜேஷ் தாசுக்கு கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு திருப்போரூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் காவல்துறை வாகனத்தில் அமர வைத்து தண்ணீர் வழங்கினர். ராஜேஷ் தாஸ் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் கதறி அழுது ஜாமீன் வாங்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நெஞ்சுவலி எனக்கூறிய ராஜேஷ் தாஸை போலீசார் சிறிது நேரம் கழித்து நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது வழக்குகள் குறித்து போலீசார் தெரிவித்தனர். இந்த வேளையில் ராஜேஷ் தாஸ் நீதிபதி முன்பு கதறி அழுதுள்ளார். தனக்கு உடல்நலம் மிகவும் சோர்வாக உள்ளது. இதனால் உடல்நலனை கருத்தில் கொண்டு ஜாமீன் வேண்டும் எனும் வகையில் புலம்பி உள்ளார். இதையடுத்து தான் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications