தமிழகத்தில் இந்த 3 இடங்களில் விரைவில் பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள்.. அறிவித்த அமைச்சர்
சென்னை: தமிழ்நாட்டில் 3 இடங்களில் மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் நேற்று தாக்கல் செய்தார். இதில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவிகளின் இடைநிற்றலை அறிவிக்கும் திட்டம் உட்படப் பல திட்டங்கள் இருந்தன.
தமிழ்நாடு அரசின் இந்தப் பட்ஜெட்டை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இல்லை என்று விமர்சித்து இருந்தது.

வேளாண் பட்ஜெட்
திமுக அரசு பொறுப்பேற்புக்கும் போதே இனி வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு தவழும் குழந்தையாக இருந்த வேளாண் பட்ஜெட் ,இந்த ஆண்டு நடந்து செல்லும் குழந்தையாகவும் அடுத்த ஆண்டுகளில் ஓடும் குழந்தையாகவும் இருக்கும் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

3 உணவுப் பூங்கா
இந்த வேளாண் பட்ஜெட்டில் அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திண்டிவனம், தேனி, மணப்பாறை மாவட்டங்களில் மதிப்புக் கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார், மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ரூ.5,157 கோடி நிதி ஒதுக்கீடு என்று அவர் அறிவித்தார்,

மரம் வளர்ப்பு திட்டம்
ரூ.12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். அதேபோல ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் அவர் அறிவித்தார்.
Recommended Video

பயிறு வகை விதைகள்
பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்று குறிப்பிட்ட அவர், வேளாண் சார்ந்த தொழில்களைத் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு என்றும் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு என்றும் அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications