ஆஹா.. ரொம்ப நாள் அப்பறம்.. அப்படியே பூரித்து போன பிடிஆர்.. முகம் முழுக்க பிரகாசம்.. கவனிச்சீங்களா?
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் பின் வரும் முதலீடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளாக குவிந்து வருகின்றன.
வேலைவாய்ப்புகள்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் மட்டும் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.
பிடிஆர் மவுசு: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கும் அரங்கில் அவரின் பேச்சை கேட்க நூற்றுக்கணக்கில் மக்கள் குவிந்தனர். அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கும் அரங்கில் அதிகளவில் பங்கேற்பாளர்கள் குவிந்தனர். அவர் டீப் திங்க் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசினார்.
அவரை பேச்சை கேட்க அரங்கு முழுக்க மக்கள் குவிந்தனர். கடைசியில் இடம் இல்லாமல் அவரின் அரங்கை மூடி.. க்ளோஸ் மீட்டிங் போல மூடப்பட்ட அரங்கில் பலநூறு பேர் முன் பிடிஆர் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு அவரின் உரையை கேட்க பலர் குவிந்து இருந்தனர்.,
முகத்தில் பொலிவு: இந்த நிகழ்ச்சியில் பிடிஆர் முகத்தில் பெரிய அளவில் பொலிவு காணப்பட்டது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிடிஆர் பேசுகையில், எதிர்காலத்தில் ஐடி துறையில் அதிக வேலை வாய்ப்பு இருக்கும்.
மற்ற மாநிலங்களில் 18 வயதில் பள்ளி கல்வி அறிவு பெற்றவர்கள் 50 சதவீதமே உள்ளனர்... ஆனால் தமிழ்நாட்டில் 90 சதவீதம் பேர் உள்ளனர். இந்த முதலீடுகள் தமிழ்நாட்டை வேறு விதமாக மாற்றும், என்று பிடிஆர் கூறி இருந்தார்.
கடந்த சில காலமாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் அமைச்சர் பிடிஆர் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பின் நேற்றுதான் அவர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அதோடு அவரின் முகத்திலும் ஒரு பொலிவு காணப்பட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தந்து லைம் லைட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அவருக்கு மீண்டும் லைம் லைட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications