Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு மண்டலத்திற்கு ஜாக்பாட்! குவியும் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள்! அதுவும் அந்த 4 மாவட்டம் மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை; தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வரும் காலங்களில் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை உட்பட 10 நகரங்களில் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சேலம், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் என்று ஒரே நாளில் மூன்று டைடல் பார்க் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Tamil Nadu Global Investors meet: How GCC and IT parks will shape the Kongu Region soon?

மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐடி பூங்காக்களில் புதிய நிறுவனங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் ஓசூர், கோவை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் ஐடி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையானது தாமதமின்றி செயல்படுத்தப்படும், என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தஞ்சாவூர் பூங்கா; சமீபத்தில்தான் தஞ்சையில் , 92.50 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளன தற்போது நிலையில் போர்வெல் பணிகள் முடிந்து தரைத்தளம் முடிந்து 1 தளம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பிளான்படி பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஹை ரைஸ் : இதற்காக இந்த மூன்று மாவட்டங்களில் பல்வேறு விதிகள் மாற்றப்பட உள்ளன. ஐடி பார்க்க தொடங்க வசதியாக மின்சார சலுகைகள் , பல மாடி கட்டிடம்கட்ட வசதியாக எப்எஸ்ஐ சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. தஞ்சையிலும் இந்த விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

திருச்சி பூங்கா: இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி சார்பில் திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பூங்கா அமைக்க 14.1 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் தமிழ்நாடு (ELCOT) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான டைடல் பார்க் லிமிடெட் நிறுவனத்திடம் ஐடி மற்றும் ஐடி அலுவலகம் கட்டுவதற்காக திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் 8.9 ஏக்கர் நிலத்தை இறுதி செய்துள்ளது.

மாநாடு: இதற்கு இடையேதான் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் வரும் காலங்களில் ஜிசிசி மற்றும் ஐடி பார்க்குகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் 10 நகரங்களில் ஐடி/ஜிசிசி பார்க்குகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இன்று அறிவித்துள்ளது.

🔸சேலம்
🔸சென்னை
🔸கோயம்புத்தூர்
🔸மதுரை
🔸திருச்சி
🔸திருநெல்வேலி
🔸திருப்பூர்
🔸ஈரோடு
🔸ஓசூர்
🔸வேலூர்

இதில் கொங்கில் மட்டும் சேலம், ஈரோடு , கோவை , திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குறி வைக்கப்பட்டு உள்ளது. இங்கே பல நிறுவனங்கள் வரும் நாட்களில் தொடங்கப்பட உள்ளன. அதேபோல் தென் மண்டலத்தில் நெல்லை, மதுரை குறி வைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மதுரையில் ஐடி பார்க் விரிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+