Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் கட்டிடங்களுக்கு இனி "இது" தேவையில்லை.. வீட்டுவசதி துறை மாஸ்.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுவசதி வாரியத்தில் விற்காமல் உள்ள 3,000 வீடுகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். அத்துடன், தமிழகத்தில் கட்டிடங்கள் கட்டுவது குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். அது என்ன?

இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடய்) தமிழக பிரிவின் சார்பில், "ஸ்டேட்கான்" எனப்படும் 2 நாள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னையில் தொடங்கியது.

 Tamil Nadu Gov Happy news and Buildings below 750 square meters in Tamil Nadu, height increased from 12 to 14 meters

முத்துசாமி: இதனை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் பி.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கட்டிட அனுமதி, நிலமாற்றம், மறுவரையறை உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சங்கம் சார்பில் இந்த கருத்தரங்கில் பேசப்பட்டது.

பின்னர் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி, "கட்டுமானத் துறையினரின் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் உள்ளன.. இதில், 43 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 25 கோரிக்கைகள் மீது உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன... மேலும் சில கோரிக்கைகளுக்கு சட்டத்திருத்தங்கள் தேவைப்படுவதால் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

அறிவிப்பு: ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் தொடர்பாக முதல்வர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதியளிக்கும் கட்டிடத்துக்கான உயரத்தை 12-ல் இருந்து 14 மீட்டராக்கும் கோரிக்கை தொடர்பாக விரைவில் அறிவிப்பு வர உள்ளது.. தளப்பரப்பு குறியீடு என்பது 2.25 மற்றும் 3.25-க்கு இடையில் ஒரு அளவை கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்யப்படும்.

பணிமுடிப்பு சான்றிதழை பொறுத்தவரை 750 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு 3 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்ற நடைமுறை இப்போது உள்ளது.. இனிமேல் 8 சமையலறை வரை சான்றிதழ் தேவையில்லை என்பதற்கான அனுமதி விரைவில் வெளியாக உள்ளது. மாஸ்டர் பிளானை பொறுத்தவரை 8 தயாரிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பிளான்: தமிழகத்தை பொறுத்தவரை 8 இடங்களில் மாஸ்டர் பிளான் நடைமுறையில் உள்ளது. 7 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 19 சதவீதமாக மாறி உள்ளது. அதை 22 சதவீதம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வனம் சார்ந்த "ஹாக்கா" பகுதி என்பது சில மாவட்டங்களில் பிரச்சினை உள்ளது. இதில் கிராமம் என்று எடுப்பதை விடுத்து, குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு மட்டும் விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தடையின்மை சான்றிதழ்கள் எண்ணிக்கையை குறைத்து ஆன்லைனில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் விரைவில் எடுக்கப்படும்.

தனியார் வசம்: கோயம்பேடு பேருந்து நிலையத்தை தனியார் வசம் கொடுக்க உள்ளதாக வரும் செய்திகள் முற்றிலும் தவறானது. வீட்டு வசதி வாரியத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் தனியார் குடியிருப்புகளை விட விலை குறைவாக தான் உள்ளது. இப்போது வரை வீட்டு வசதி வாரியத்தில் விற்காமல் 3000 வீடுகள் உள்ளன. அதை விற்பதற்கான நடவடிக்கையை எடுத்து கொண்டு வருகிறோம். மேலும், விற்காத வீடுகளை வாடகை விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

முன்னதாக அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, "திட்ட அனுமதிக்கு ஒற்றைச்சாளர அனுமதி திட்டம் கொண்டு வருவது குறித்து சிஎம்டிஏ ஆய்வு செய்யும்... விண்ணப்பத்துடன் உரிய காலத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், இனி காலங்களில் அனுமதியை இரட்டிப்பாக்கும் முயற்சியை எடுப்போம்" என்று உறுதி தந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+