அதிரடி.. 10% மின்கட்டணம் குறைப்பு.. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு நற்செய்தி சொன்ன தமிழக அரசு
சென்னை: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 10 சதவீதம் குறைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் சமீபத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளானது. குறிப்பாக தொழில் நிறுவனத்தினர் அதிகமாக பாதிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் எழுந்தன.
இதனால் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

10 சதவீதம் வரை குறைப்பு
இந்த கோரிக்கையை தற்போது தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் 10 சதவீதம் குறைத்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாத தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருத்தப்பட்ட மின்கட்டணம்
2022-2023ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளது. இதனால் ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charge) குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

யாருக்கு பயன்?
அதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி மற்றுமு் வேலைாவ்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு கோரிக்கையை ஏற்று குறைந்தழுத்த மின்இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து இதற்கு உரிய கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

அதிக பயன்
இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும் என குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் அரசு செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications