Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை தீப திருவிழா.. ஸ்பெஷல் பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.. இதை நோட் பண்ணுங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திகை தீப திருவிழாவிற்கு 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சிறப்பு பேருந்துகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 2700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6947 நடைகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.

Tamil Nadu government announced Special Buses in ahead of Karthikai Festival

மேலும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்.

அவரலூர்பேட்டை ரோடு -SRGDS பள்ளி எதிரில் - சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்

திண்டிவனம் ரோடு - ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு

வேலூர் ரோடு - Anna Arch - போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு

வேட்டவலம் ரோடு - சர்வேயர் நகர் வேட்டவலம், விழுப்பரம்

திருக்கோயிலூர் ரோடு, மேல்நிலைப்பள்ளி அருகில்,
அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர்- திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம்,

மணலூர்பேட்டை ரோடு - செந்தமிழ் நகர் - நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல்,
திருநெல்வேலி

செங்கம் ரோடு மற்றும் சுபிக்க்ஷா கார்டன்- அத்தியந்தல் - மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை

காஞ்சி ரோடு -டான் பாஸ்கோ பள்ளி - செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், - ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர், காஞ்சி, மேல்சோழங்குப்பம்

மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும்.
பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள
போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கு தகுந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என
மாண்புமிகு போக்குவரத்துதுறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tamil Nadu government announced Special Buses in ahead of Karthikai Festival

சிறப்பு பேருந்துகள்: பொதுவாக நீண்ட விடுமுறை வரும் போதெல்லாம் தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் விடப்படுவது வழக்கம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+